வெளிநாட்டு பெண்ணை ஏமாற்றிய தமிழர்: 6 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்த உண்மை

Report Print Santhan in ஏனைய நாடுகள்

தாய்லாந்து பெண்ணை இரண்டு குழந்தைகளுக்கு தாயாக்கி ஏமாற்றிய தொழிலதிபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் பேங்காங் தூதரகம் மூலம் சென்னை காவல் ஆணையருக்கு மின்னஞ்சல் மூலம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில் சென்னை சூளை மேட்டைச் சேர்ந்த மனோஜ் ஜெயின் மோசடி பற்றி தெரியவந்துள்ளது.

மருந்து பொருட்கள் வியாபாரம் செய்து வரும் மனோஜ் தொழில் நிமித்தம் காரணமாக 6 ஆண்டுகளுக்கு முன்பு தாய்லாந்து சென்றுள்ளார்.

தாய்லாந்து சென்ற அவர் அங்குள்ள கேளிக்கை விடுதிக்கு சென்றுள்ளார். அங்கு நார்மன் ஜெப்பும் என்ற பெண்ணுடன் அறிமுகமாகிய அவர், மது போதையில் நார்மனிடம் அநாகரிகமாக நடந்துள்ளார்.

அதற்கு மன்னிப்பு கேட்ட அவர், நார்மனைத் திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து, இருவரும் கணவன்- மனைவி போல வாழ்ந்ததால் இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் பிறந்தனர்.

பாங்காங்கில் உள்ள பதிவு அலுவலகத்தில் இருவரும் பதிவுத் திருமணம் செய்துகொண்டனர்.

இதையடுத்து, மனோஜ் ஜெயினின் நண்பர்களான விகாஸ் கோத்தாரி, சந்தோஷ் ஆகியோர் தாய்லாந்துக்குச் சென்றுள்ளனர்.

அப்போது, விகாஸ் கோத்தாரி, நார்மன் ஜெப்பையைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்.

அதன் பின் வீட்டில் கணவன் மனைவி இருவருக்கு பிரச்சனை ஏற்படவே மனோஜ் ஜெயின் சென்னைக்கு சென்றுள்ளார். சென்னைக்கு சென்ற அவரைத் தேடிய நார்மன் ஜெப் தாய்லாந்து பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.

புகார் அளித்த பின்பு பொலிசார் அவரின் திருமண சான்றிதழை பார்த்த போது அந்தச் சான்றிதழில் கணவர் மனோஜ் ஜெயினுக்குப் பதிலாக அவரின் நண்பர் சந்தோஷ் கையெழுத்திட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இது கடந்த ஆண்டு தான் நார்மனுக்கு தெரியவந்ததால், தாய்லாந்து நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து சந்தோஷை விவாகரத்து செய்துள்ளார்.

இதனால் மனம் உடைந்த அவர் தன்னை ஏமாற்றிய மனோஜ் ஜெயின் மற்றும் அவரின் நண்பர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து பொலிசார் மனோஜ் மீது மோசடி வழக்கு, பாலியல் வன்கொடுமை போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து நடத்தப்பட விசாரணையில் மனோஜுன் நண்பர் விஷாகும் தொடர்பு இருப்பது தெரியவந்ததால், பொலிசார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers