பிஞ்சு குழந்தையை கவ்விச் சென்று சாப்பிட்ட சிறுத்தை: வனவிலங்கு காப்பகத்தில் அதிர்ச்சி சம்பவம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் அமைந்துள்ள ராணி எலிசபெத் தேசிய வனவிலங்கு பூங்காவில் 3 வயது குழந்தையை சிறுத்தை ஒன்று கவ்விச் சென்று சாப்பிட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த வனவிலங்கு பூங்காவில் பணிபுரியும் ஊழியர்களுக்கான குடியிருப்பின் அருகாமையிலேயே குறித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. வெள்ளியன்று சம்பவத்தின்போது கொல்லப்பட்ட குழந்தையானது பணிப்பெண் ஒருவரின் மேற்பார்வையில் இருந்துள்ளது.

அப்போது புதர் மறைவில் இருந்து குதித்து வெளியே வந்த சிறுத்தை ஒன்று திடீரென்று குழந்தையை கவ்விக்கொண்டு மீண்டும் புதருக்குள் மறைந்துள்ளது.

இதனிடையே பணிப்பெண்ணுக்கு தனது பின்னால் குழந்தை நடந்து வருவது தெரியாது எனவும், திடீரென்று குழந்தையின் அலறல் சத்தம் கேட்டே தாம் திரும்பிப் பார்த்ததாகவும், குழந்தையை மீட்கும் பொருட்டு சிறுத்தையை தாக்க முயன்றதாகவும் அதிர்ச்சி விலகாமல் தெரிவித்துள்ளார்.

இதனிடையே வனவிலங்கு காப்பக ஊழியர்கள் இணைந்து குழந்தையை மீட்க களமிறங்கினர். ஆனால் இரவு வெகு நேரம் தேடியும் குழந்தையையோ சிறுத்தையையோ அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

தொடர்ந்து காலை விடிந்ததும் மீண்டும் தேடுதல் வேட்டையில் களமிறங்கிய ஊழியர்களுக்கு, புதர் மறைவில் இருந்து குழந்தையின் எலும்புகளுடன் மிச்சம் மீதி உடல் பாகங்கள் கிடைத்துள்ளது. தற்போது அந்த சிறுத்தையை பிடிப்பதற்காக ஒரு குழு அமைத்து தேடி வருகின்றனர்.

ஒருமுறை மனித உடலின் ருசி கண்ட சிறுத்தை மீண்டும் எப்போது வேண்டுமானாலும் அடுத்த தாக்குதலுக்கு தயாராகலாம் என தெரிவித்துள்ள அதிகாரிகள், அது மிகவும் ஆபத்தாக முடியும் எனவும், அதனால் உடனடியாக குறித்த சிறுத்தையை இனம்கண்டு காப்பகத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் தென்னாப்பிரிக்காவில் பிரித்தானியாவை சேர்ந்த வனவிலங்கு அருங்காட்சியக உரிமையாளரை சிங்கம் ஒன்று தாக்கியது. குற்றுயிரான நிலையில் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்ட அவர் தற்போது உடல் நலம் தேறி வருவதாக கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers