ராணுவத்திற்காக ரஷ்யா செலவிடும் தொகை எவ்வளவு தெரியுமா?

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

பனிப்போர் கால கட்டத்திற்கு பின்னர் கடந்த ஆண்டில் தான் உலக நாடுகளின் ராணுவ செலவினம் அதிகரித்துள்ளதாக ஸ்வீடனின் அமைதி நிறுவனமொன்று தெரிவித்துள்ளது.

இதில் அமெரிக்க ஐக்கிய நாடுகள், சீனா மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் உச்சத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

புதனன்று வெளியான குறித்த ஆய்வறிக்கையில் உலக நாடுகளின் மொத்த ராணுவ செலவினம் 2017 ஆம் ஆண்டு 1.73 ட்ரில்லியன் டொலர் என பதிவாகியுள்ளதாகவும், இது கடந்த 2016 ஆம் ஆண்டை விடவும் 1.1 விழுக்காடு அதிகம் எனவும் தெரியவந்துள்ளது.

குறித்த பட்டியலில் 610 பில்லியன் டொலருடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. மிகப்பெரும் ராணுவ வலிமை கொண்டுள்ள அமெரிக்காவின் ராணுவ செலவு நிலையாக உள்ளது.

அந்நாட்டிற்கு அடுத்த ஏழு இடங்களில் உள்ள நாடுகளின் ராணுவ செலவின் கூட்டுத் தொகைக்கு அமெரிக்காவின் செலவு தொகை சமமாக உள்ளது.

2-ஆம் இடத்தில் இருக்கும் சீனா 228 பில்லியன் டொலர் செலவிட்டுள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் சீனா ராணுவத்திற்காக செலவிடும் தொகையானது 13 விழுக்காடு அதிகரித்துள்ளது.

ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி 69.4 பில்லியன் டொலர் தொகை செலவிட்டு சவுதி அரேபியா 3-ஆம் இடத்தில் எட்டியுள்ளது.

மேலும், 2017-ம் ஆண்டு ரஷ்யா 66 பில்லியன் டொலர்கள் செலவு செய்ததாக குறித்த பட்டியலில் தெரிய வந்துள்ளது. இது கடந்த 19998 ஆம் ஆண்டில் இருந்து முதன் முறையாக 20 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ராணுவத்திற்காக 2017-ல் அதிகம் செலவிட்ட நாடுகள்:

  1. அமெரிக்கா - $610bn
  2. சீனா - $228bn
  3. சவுதி அரேபியா - $69.4bn
  4. ரஷ்யா - $66.3bn
  5. இந்தியா - $64bn
  6. பிரான்ஸ் - $57.8bn
  7. பிரித்தானியா - $47.2bn
  8. ஜப்பான் - $45.4bn
  9. ஜேர்மனி - $44.3bn
  10. தென் கொரியா - $39.2bn

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers