மரண பயத்தை காட்டிய சிங்கம்: பயணிகளின் திக் திக் நிமிடங்கள்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

தென்னாப்பிரிக்காவில் உள்ள நெடுஞ்சாலையில் கார்கள் நின்றுகொண்டிருக்கையில் திடீரென காட்டுக்குள் இருந்து வந்த சிங்கம் அங்கிருந்த பயணிக்கு மரண பயத்தை காட்டியுள்ளது.

நெடுஞ்சாலை பாதை ஒன்றில் பயணித்துக்கொண்டிருக்கையில் திடீரென சிக்னல் போடப்பட்டதால் வாகனங்கள் வரிசையில் நின்றிருந்தன. காடுகள் நிறைந்த பகுதி என்பதால், திடீரென சிங்கம் ஒன்று நடுரோட்டில் குறுக்கிட்டுள்ளது.

அங்கு நின்றுகொண்டிருந்த சபாரி காரின் கதவினை தனது பற்களால் கடித்து திறக்க முயற்சித்துள்ளது.

காருக்குள் இருந்த பெண் பயணி என்ன செய்வதென்று தெரியாமல் மரண பயணத்தில் தனது வாயை மூடிக்கொண்டு, பின்னால் இருந்த பயணிகளை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டிருந்திருந்தார்.

சிங்கம் பற்களால் காரினை திறக்கும் காட்சியை பின்னால் இருந்த பயணியான, Bronwyn Hattingh என்பவர் வீடியோ எடுத்துள்ளார். சிங்கம் இவ்வாறு செய்ததால் அனைத்து பயணிகளும் சில நிமிடம் மரண பயத்தில் உறைந்தனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers