அமெரிக்க படைகள் தொடர்ந்து எல்லையில் இருக்கும்: தென் கொரிய அரசு அறிவிப்பு

Report Print Trinity in ஏனைய நாடுகள்

தென் மற்றும் வட கொரிய நாடுகளுக்கு இடையேயான போர் முடிப்பதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தாலும் தனது எல்லையில் இருக்கும் அமெரிக்க படை அங்கேயே இருக்கும் என தென்கொரிய அரசு கூறியுள்ளது.

29000 அமெரிக்க படையினர் தென் கொரியாவின் பாதுகாப்பிற்காக சேவை செய்து வருகின்றனர்.

இந்தப் படைகள் வெளியேற வேண்டும் என்கிற நிபந்தனையின் பெயரில் தனது அணு ஆயுதங்களை இனி பயன்படுத்த போவதில்லை என்று வடகொரியா கூறியிருந்தது.

இது பற்றி தென்கொரிய வெளியுறவுத்துறை அதிபர் கிம் இயூ-க்யீஓம் கூறுகையில், சமாதான ஒப்பந்தத்திற்கும் அமெரிக்க படைகள் தென் கொரியாவில் இருப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் இது தென்கொரியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையேயான கூட்டணி சம்பந்தப்பட்ட விவகாரம் என்றும் அவர் கூறியுள்ளார்.

தற்காலிக போர் நிறுத்த முறையில் இரு நாடுகளுக்கு இடையிலான போர் 1953ல் முடிவுக்கு வந்தது. இருப்பினும் முறையான போர் முடிவுகள் எதுவும் இதுவரையில் எட்டப்படாத நிலையில் வரலாற்று சிறப்பு மிக்க பன்முன்ஞ்சோம் உச்சி மாநாடு சமீபத்தில் நடந்தேறியது.

அப்போது சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன .

அதில் பாதுகாப்பு குறித்து உறுதிப்படுத்தப்பட்டால் தங்களது நாட்டில் அணு ஆயுதங்களின் தேவை இனி இருக்காது என்று வட கொரிய அதிபர் கிம் ஜாங் தெரிவித்திருந்தார்.

மேலும் வரும் வாரங்களில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடனான சந்திப்பு ஒன்றை நிகழ்த்த இருக்கிறது வடகொரியா. இதற்கான இடம் மற்றும் நாள் போன்றவை இன்னமும் முடிவாகவில்லை.

இது போன்ற நேரத்தில் தென் கொரியாவின் வெளியுறவுத்துறை அதிபரின் இந்த கூற்று அதிக கவனம் பெற்றுள்ளது எனத் தெரிய வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...