போதையில் பொலிஸை சரமாரியாக தாக்கிய ரஷ்ய பெண்

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

துபாயில் சுற்றுலாப்பயணி பெண்ணொருவர், போதையில் பொலிஸ் ஒருவரை அடித்து, உதைத்து, கடித்த சம்பவம் நடந்துள்ளது.

ரஷ்யாவைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த பிப்ரவரி மாதம் துபாய்-க்கு சுற்றுலா சென்றுள்ளார். நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த அவர், பார் ஒன்றிற்கு சென்றுள்ளார்.

அப்போது குறித்த பெண், போதையில் மற்றொரு சுற்றுலாப் பயணியிடம் திடீரென தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவரை அடித்ததால் ஓட்டல் நிர்வாகத்தினர் பொலிசாருக்கு தகவல் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் குறித்த பெண்ணை விசாரிப்பதற்காக அவரை வெளியே அழைத்து வந்தனர். அப்போது அவர் வரமாட்டேன் என்று மறுத்ததுடன் பொலிஸை அடித்து, கழுத்து, கன்னம் என கடித்துள்ளார்.

மேலும், பொலிஸ் வாகனத்தின் கண்ணாடியையும் உடைத்துள்ளார். இந்நிலையில், குறித்த பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நடந்த விசாரணையில் அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...