பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் கண்ணீர் பேட்டி

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்

உத்தரபிரதேசத்தில் மதரஸாவில் வைத்து 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கிழக்கு டெல்லியின் காசிபூர் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி, கடந்த 21ம் திகதி மார்க்கெட்டுக்கு சென்றுள்ளார்.

மாலை நேரம் ஆகியும் சிறுமி வீடு திரும்பாததால், சந்தேகமடைந்த அவரது பெற்றோர் பொலிசில் புகார் அளித்தனர்.

உடனடியாக பொலிசார் சிறுமியின் செல்போனை கொண்டு சோதனை நடத்தியதில் உத்தரபிரதேசத்தில் இருப்பது தெரியவந்தது.

அங்கே காசியாபாத்தில் மதரஸாவில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறுமியை மீட்டனர், அவரை பரிசோதித்து பார்த்ததில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது.

இதனைதொடர்ந்து மார்க்கெட் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது 17 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன், சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து சிறுவன் உட்பட அவனுக்கு உடந்தையாக இருந்த சந்தேகத்தின் பேரில் மூன்று பேரை கைது செய்து பொலிசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது, குற்றம்சாட்டப்பட்டுள்ள சிறுவனை மருத்துவ பரிசோதனை செய்ததில் அவன் சிறுவன் அல்ல என்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த கண்ணீர் பேட்டியில், தன்னை கட்டாயப்படுத்தி மதரஸாவுக்கு அழைத்து சென்றதாகவும், தன்னையும், தன் குடும்பத்தையும் கொன்றுவிடுவதாக மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னிடம் இருந்த செல்போனை பிடுங்கி கொண்டதுடன், ஒரு கிளாஸ் தண்ணீரை கொடுத்து அருந்த சொன்னதாகவும் கூறியுள்ளார்.

அதை குடித்தபின்னர் தனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை எனவும், மறுநாள் காலை எழுந்து பார்த்த போது தன் உடைகளை ஈரமாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.

இந்த வழக்கில் மதரஸாவின் மௌலவியிடம் விசாரணை நடத்த வேண்டும் என பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...