காதல் என்ற பெயரில் பல்கலைக்கழகம் உள்ளே எல்லை மீறிய மாணவர்கள்: வெளியான திடுக்கிடும் தகவல்கள்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

உகாண்டாவில் இஸ்லாமிய பல்கழைக்கலகம் 23 மாணவர்களை அதிரடியாக இடைநீக்கம் செய்திருப்பதாக அறிவித்துள்ளது.

உகாண்டாவின் Mbale பகுதியில் இஸ்லாமிய பல்கழைக்கலகம் ஒன்று உள்ளது.

அங்குள்ள மாணவர்களை கண்காணிக்கும் ஒழுங்கு குழு பல்கழைகலகத்தின் விதிமுறைகள் மீறிய காரணத்திற்காக 23 மாணவர்களை இடை நீக்கம் செய்துள்ளது.

இது குறித்து பல்கழைக்கலக ஒருங்கிணைப்பாளர் Dr. Sulait Kabali கூறுகையில், இடை நீக்கம் செய்யப்பட்ட மாணவர்களில் சிலர் பல்கழைகலகத்தின் உள்ளே உறவு வைத்துள்ளனர்.

பல்கழைகலகத்திற்கு என்று விதிகள், ஒழுங்கு முறைகள் இருக்கிறது. ஆனால் குறித்த மாணவர்கள் அதை எல்லாம் மீறியுள்ளனர்.

மேலும் இவர்களில் சிலர் மது, போதை பொருள்கள் பயன்படுத்துதல், வன்முறை செயல்களிலும் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமின்றி தினசரி கண்காணிப்பின் போது இந்த மாணவர்களில் சிலர் காதல் என்ற பெயரில் எல்லை மீறி நடந்துள்ளனர்.

இதை இங்கு படிக்கும் மாணவர்களே கூறியுள்ளனர்.

இவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த தண்டனை, மற்ற மாணவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும் எனவும், பல்கழைகலகத்தின் விதிமுறைகள் மற்றும் ஒழுக்கங்களை மீறுவர்களை நிர்வாகம் கல்லூரியை விட்டு வெளியில் அனுப்பவும் தயங்காது என கூறியுள்ளார்.

குறித்த பல்கழைகலகத்தில் sharia Law பின்பற்றப்பட்டு வருகிறது. இங்கு திருமணம் முடித்த ஜோடிகள் படித்தால் கூட முத்தம் கொடுப்பதற்கு தடை உள்ளது.

அதுமட்டுமின்றி திருமணம் முடிந்த மாணவரோ அல்லது மாணவியோ மூன்றாவது நபரிடம் 10 நிமிடத்திற்கு மேல் பேச அனுமதி இல்லை என்று கல்லூரி மாணவர் ஒருவர் கூறியுள்ளார்.

மேலும் குறித்த மாணவர்கள் அனைவரும் ஒரு வருடத்திற்கு இடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...