ரஷ்யாவில் உயிரிழந்த தமிழர்கள்: கடலில் குளிக்க சென்ற போது பரிதாபம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் முதுநிலை மருத்துவம் பயில சென்ற தமிழக மாணவர்கள் இரண்டு பேர் கடலில் மூழ்கி பலியாகியிருக்கும் சம்பவம் அவர்களது பெற்றோருக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் நவீன். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சேர்ந்தவர் ஜெய்வந்த். இருவரும் முதுநிலை மருத்துவம் பயில் கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதியுள்ளனர்.

ஆனால் அதில் தேர்ச்சி அடையாத காரணத்தினால், இருவரும் ரஷ்யாவில் முதுகலை மருத்துவம் பயில சேர்ந்தனர்.

இந்நிலையில் நவீன், ஜெய்வந்த் ஆகியோர் நேற்று நண்பர்களுடன் ரஷ்யாவில் உள்ள கடலில் குளித்தனர். அப்போது பெரிய ராட்சத அலையில் சிக்கி இருவரும் பலியாகியுள்ளனர்.

இந்த செய்தியை கேட்ட குடும்பத்தினர் மிகுந்த சோதனையில் உள்ளனர். அதுமட்டுமின்றி அவர்களிடன் உடலை தமிழகத்திற்கு கொண்டு வர மத்திய அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...