இரு கொரிய தலைவர்களின் முக்கிய சந்திப்பு! வடகொரியா தொலைக்காட்சி ஏன் இப்படி செய்தது என குழப்பம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

தென் கொரியா எல்லைக்குள் சென்ற வடகொரியா ஜனாதிபதி குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் போன்றவைகளை வடகொரியா தொலைக்காட்சிகள் வெளியிடாததால் ஏன என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

1953-ஆம் ஆண்டு நிறைவடைந்த கொரிய போருக்குப் பின்னர், சுமார் 65 ஆண்டுகளுக்குப் பிறகு தென் கொரியா எல்லைக்குள் வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன் நேற்று சென்றார்.

இது வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வாகக் கருதப் படுகிறது. தென் கொரியாவின் எல்லைக்கே சென்று, அந்நாட்டு ஜனாதிபதி மூன் ஜியே இன், வட கொரிய ஜனாதிபதியை வரவேற்றார்.

வட மற்றும் தென் கொரியாவின் எல்லைக் கோடுகளாகக் கருதப்படும் கான்கிரீட் சுவர் பகுதியில் இரு நாட்டு ஜனாதிபதிகளும் கை குலுக்கிக்கொண்டனர். அதன் பின்னர், கான்கிரீட் சுவரைக் கடந்து, வட கொரிய ஜனாபதி தென் கொரியவுக்குள் சென்றார்.

பிறகு, தென் கொரிய ஜனாதிபதியை கிம் ஜாங் உன், தன் நாட்டு எல்லைக்குள் கைப்பிடித்து அழைத்துச்சென்றார்.

இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வை தென் கொரியா மக்கள் உற்சாகமாக கொண்டாடினர். இது தொடர்பான காட்சிகள் தென் கொரியாவின் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது.

கிம் ஜாங் உன்னின் பேச்சை மக்கள் கேட்பதற்கு ஏதுவாக தென் கொரியாவின் தலைநகரில் உள்ள Seoul-ல் பெரிய திரையில் இந்த சந்திப்புகள் குறித்த காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருந்தன.

அப்போது கிம்மின் பேச்சை கேட்ட தென் கொரியா மக்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு காணப்ட்டனர். அதுமட்டுமின்றி எல்லை மீறிய சந்தோசத்தில் இருந்ததாகவும் அங்கிருக்கு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் தென் கொரிய இராணுவத்தின் முன்னாள் துணை தளபதி Bum Chun கூறுகையில், நான் முதன் முதலாக கிம்மின் பேச்சை கேட்கிறேன்.

இதற்கு முன்பு கேட்டுள்ளேன் ஆனால் அதில் பல்வேறு குழப்பங்களுடன் வீடியோக்கள் வரும். ஆனால் தற்போது அவரின் குரலை தெளிவாக கேட்டேன். அதில் அவர் நிதானமாக, வேடிக்கையாகவும் சில வார்த்தைகள் பேசினார்.

இப்படி ஒரு மாற்றம் நிகழும் என்று எதிர்பார்க்கவே இல்லை இது ஒரு அற்புதமான துவக்கம் என்று கூறியுள்ளார்.

தென் கொரியாவில் இப்படி மக்கள் மகிழ்ச்சியை கொண்டாடிக் கொண்டிருக்க, வடகொரியாவிலோ ஜனாதிபதி கிம் ஜாங் அங்கு சென்றிருக்கிறார் என்ற தகவல் மட்டுமே தெரிவிக்கப்பட்டதாகவும், என்னென்ன நடந்து கொண்டு இருக்கிறது என்பது தொடர்பன புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவை அந்நாட்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பவில்லை என்று கூறப்படுகிறது.

இப்படி ஒரு எல்லையற்ற மகிழ்ச்சியில் மக்கள் இருக்கும் போது ஏன் வடகொரியா தொலைக்காட்சி இது தொடர்பான புகைப்படங்களை காட்டவில்லை என்ற கேள்வி எழும்பியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers