சிறார்களை வைத்து ஆபாசப்படம்: சிறை தண்டனை பெற்ற முதல் பாகிஸ்தானியர்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

சிறார்களை வைத்து ஆபாசப் படமெடுக்கும் கும்பலை சேர்ந்த பாகிஸ்தானியருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சிறார்கள் தொடர்பான வழக்கில் பாகிஸ்தானியர் ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்படுவது இது முதன் முறையாகும்.

இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பாகிஸ்தானின் லகூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் உள்ளிட்ட முக்கிய பகிகுதிகளில் உள்ள சிறார்கள் திடீரென்று மாயமாவதும், கொலை செய்யப்படுவதும் வாடிக்கையாக நடந்து வந்த நிலையில், சதாத் அமின் என்ற பாகிஸ்தானியர் தொடர்பில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நார்வே தூதரக அதிகாரிகள் புகார் அளித்தனர்.

இதனடிப்படையில் விசாரணை மேற்கொண்ட பாகிஸ்தான் அதிகாரிகள் சதாத் அமினை கைது செய்தனர்.

மட்டுமின்றி அவரது குடியிருப்பில் இருந்து சிறார் தொடர்பில் 650,000 ஆபாச புகைப்படங்களும் வீடியோக்களும் கைப்பற்றப்பட்டன.

இந்த நிலையில் அவர் மீதான விசாரணை முடிவுக்கு வந்ததை அடுத்து 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் 10,000 டொலர் அபராதமும் விதித்து லாகூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சதாத் அமின் பாகிஸ்தானில் மட்டுமல்ல, ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் உள்ள சிறார் ஆபாச வீடியோ கும்பலுடன் தொடர்புடையவர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers