இளம்பெண்ணின் மர்ம உறுப்பை சேதப்படுத்தி கொலை செய்த கொடூரன்!

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் இளம்பெண்களை கடத்தி கற்பழித்து பிறப்புறுப்பை சேதப்படுத்தி கொலை செய்த கொடூரனை பொலிசார் பொறி வைத்து பிடித்துள்ளனர்.

ரஷ்யாவின் யூரல் மலைப்பகுதியில் தொடர்ந்து இளம்பெண்கள் மாயமாவதாகவும் சிதைக்கப்பட்ட நிலையில் உடல்கள் கண்டெடுக்கப்படுவதும் வாடிக்கையாக நடைபெற்று வந்தது.

பொலிசார் இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டும் குற்றவாளியை கைது செய்ய முடியாமல் திணறினர்.

இதனையடுத்து பொலிசார் பொதுமக்களுக்கு கோரிக்கை வைத்தனர். இருப்பினும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இன்றி தடுமாறியது.

இந்த நிலையில் யூரல் பகுதியில் மாயமான இளம்பெண்ணின் உடல் மீட்க்கப்பட்டது. அதுவும் பிறப்புறுப்பு சிதைக்கப்பட்ட நிலையிலேயே இருந்துள்ளது.

சம்பவத்தன்று ஒரு குழந்தைக்கு தாயாரான Irina Vakhrusheva தமது தோழியை சந்திக்கும் பொருட்டு நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த Alexey Falkin குறித்த பெண்மணியை தாக்க முயன்றுள்ளார்.

அதில் இருந்து தப்பிய அவர் விரைந்து நடக்கத் துவங்கியுள்ளார். இதனிடையே தமது மொபைலில் உதவிக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

ஆனால் முன்னாள் ராணுவ வீரரான Alexey Falkin துரிதமாக செயல்பட்டு குறித்த பெண்மணியை தாக்கி, அடுத்துள்ள பாழடைந்த கட்டிடம் ஒன்றில் இழுத்து சென்றுள்ளார்.

அங்கே Irina-ஐ கத்தி முனையில் கற்பழித்து பின்னர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். அதனையடுத்து அவரது பிறப்புறுப்பை சேதப்படுத்தியுள்ளார்.

Irina உடல் பொலிசாரால் மீட்கப்படும் போது மொத்தல் 40 காயங்கள் இருந்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கமெராக்களை சோதனையிட்டவ் பொலிசாருக்கு தொடர் கொலைகாரனின் புகைப்படம் கிட்டியுள்ளது.

இதனையடுத்து யூரல் மலைப்பகுதியில் தனது அடுத்த இரையை தேடி இறங்கிய Alexey Falkin-ஐ பொலிசார் பொறி வைத்து பிடித்துள்ளனர்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் இதுவரை 8 பெண்களை கடத்திச் சென்று பலாத்காரம் செய்துள்ளதாகவும் அதில் 3 பேரை கொடூரமான முறையில் கொலை செய்துள்ளதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.

மட்டுமின்றி 2 சிறுமிகளையும் சித்திரவதைக்கு உட்படுத்தியதாகவும், அந்த உடல்களை மலைப்பகுதியில் மறைவு செய்துள்ளதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் குறித்த நபருக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...