முடிவுக்கு வருகிறதா 60 ஆண்டுகால கொரிய போர்? விரைவில் உலகிற்கு அறிவிப்பு

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

வட கொரியா மற்றும் தென் கொரியா ஆகிய இரு நாடுகளுக்கிடையே கொரிய போர் விவகாரத்தில் சமாதான உடன்படிக்கையை அறிவிக்க இருநாடுகளின் தலைவர்களும் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

கொரிய போர் என்பது, 1950 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி முதல் 1953 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி வரை வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடம் பெற்ற போரைக் குறிக்கும்.

இரண்டு கொரியாக்களுமே தமது சொந்த அரசாங்கங்களின் கீழ் கொரியாவை ஒருமைப்படுத்த முயன்றன.

இரண்டு தரப்பினரும் தாம் கைப்பற்றிய பகுதிகளைத் தக்க வைக்கமுடியாமல் போனதால் ஜனவரி 1951 இல் இது முதலாம் உலகப் போர்ப் பாணியிலான பதுங்குகுழிச் சண்டையாக உருவானது. இறுதியில் ஒருவரும் வெற்றிபெற முடியாத நிலை ஏற்படும்வரை இது நீடித்தது.

இரு நாடுகளுமே சமாதான உடன்படிக்கையை மேற்கொள்ளாத காரணத்தால், இது முடிவுக்கு வரவில்லை. அன்று தொடங்கிய இந்த போர் பதற்றம் வருடங்கள் சென்றும் நீடித்துக்கொண்டுதான் இருக்கின்றன.

மேலும், வட கொரியாவின் அணு ஆயுத சோதனையால், கொரிய தீபகற்பத்தில் எப்போதும் பதற்றம் நிலவி வந்தது, மூன்றாம் உலகப்போர் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது ஆய்வாளர்களால் கணிக்கப்பட்டது.

ஆனால், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த சந்திப்பு அமையவிருக்கிறது. இவர்கள் இருவரும் கொரிய போர் முடிவுக்கு வந்துவிட்டது என உலகிற்கு அறிவிக்கவிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த மாதம் சீனாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வட கொரிய அதிபர், அணு ஆயுத சோதனை நடத்தப்போவதில்லை என அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1950 ஆண்டுக்கு பின்னர், தென் கொரிய மண்ணில் காலடி வைக்கும் முதல் வட கொரிய தலைவர் கிம் ஆவார்.

தென் மற்றும் வட கொரியா ஆகிய இருநாடுகளும் சந்தித்து, 1950 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கொரிய போர் முடிவடைந்துவிட்டது என அறிவிக்கவிருப்பதாக தென் கொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இரு தலைவர்களும் சந்தித்துக்கொள்ளும்போது, இராணுவமயமாக்கப்பட்ட பகுதியை பிரிப்பது குறிப்பது விவாதிப்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

அது மட்டுமின்றி, வரும் மே அல்லது ஜூன் மாதத்தில் அமெரிக்க அதிபர் டிரம்பை, கிம் சந்திப்பார் எனவும் கூறப்படுகிறது.

இந்த அறிவிப்பால், 60 ஆண்டுகால போர் முடிவுக்கு வரவிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers