சிரியாவில் ஆய்வு நடத்துங்கள்! அழைப்பு விடுத்த ரஷ்யா: சந்தேகிக்கும் அமெரிக்கா?

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

ரசாயனத்தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் சிரியாவிலுள்ள டூமாவில் ஆய்வு மேற்கொள்ள வேதியியல் நிபுணர்கள் வரலாம் என ரஷ்யா அறிவித்துள்ள நிலையில், ஏற்கனவே அங்கு சென்றிருந்த ரஷ்யர்கள் ஆதாரங்களை அழித்திருக்கலாம் எனஅஞ்சுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா இணைந்து சிரியா மீது தாக்குதல் நிகழ்த்தியதையடுத்து மேற்கத்திய நாடுகள் மீது பிரித்தானியா ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தியிருக்கலாம் என ரஷ்யா குற்றச்சாட்டை வைத்தது.

இந்நிலையில் அவை அப்பட்டமான பொய்கள் என்றும், டூமாவில் ஆய்வு மேற்கொள்வதைத் தடுப்பதற்காக ரஷ்யா அவ்வாறு கூறுவதாகவும் அவை நிராகரிக்கப்பட்டன.

இந்நிலையில் Hagueஇல் உள்ள ரசாயன ஆயுதங்கள் தடுப்பு அமைப்பான OPCWஇல் நான்கு நாடுகளுக்கிடையேயான காரசாரமான அவசரப் பேச்சு வார்த்தைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க மறுபுறம் ஆய்வாளர்கள் ஆபத்து நிறைந்த ஒரு வேலைக்காக ஆயத்தமானார்கள்.

OPCWஇன் டைரக்டர் ஜெனரல் அஹ்மத் 9 தன்னார்வலர்களைக் கொண்ட அவரது குழு டமாஸ்கஸை சென்றடைந்துள்ளதாகவும் என்றாலும் சிரிய மற்றும் ரஷ்ய அதிகாரிகள் பாதுகாப்பு காரணங்களைக் கூறி தடுப்பதால் டூமாவுக்கு இன்னும் செல்லமுடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

OPCWவிற்கான அமெரிக்க தூதரோ ரஷ்யர்கள் ஏற்கனவே சம்பவ இடத்திற்கு சென்றுள்ளதால் ஆதாரங்களை அழித்திருக்கலாம் என்று அச்சம் தெரிவித்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் லாவ்ரோவ் ரஷ்யா அவ்வாறு செய்யவில்லை என உறுதியளிப்பதாகக் கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers