சுவீடனில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

ஐரோப்பிய பயணத்தின் முதற்கட்டமாக, சுவீடன் சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஐரோப்பாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், சுவீடன் நாட்டிற்கு சென்ற அவரை அந்நாட்டின் பிரதமர் ஸ்டீபன் லோப்வென் நேரில் வரவேற்றார்.

அதனைத் தொடர்ந்து, சுவீடன் வாழ் இந்தியர்கள் சங்கொலி முழங்க மோடிக்கு வரவேற்பு அளித்தனர். இதன் பின்னர், நார்டிக் நாடுகளின் மாநாட்டில் மோடி கலந்து கொள்ள உள்ளார்.

இந்த மாநாட்டில் பின்லாந்து, நார்வே, டென்மார்க், ஐஸ்லாந்து ஆகிய நாடுகளின் பிரதமர்கள் கலந்து கொள்கின்றனர். இதில், இந்தியாவுடனான வர்த்தகம், சுற்றுச்சூழல், முதலீடு, பருவநிலை மாற்றம் தொடர்பாக பிரதமர் மோடி, நார்டிக் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

அதனைத் தொடர்ந்து, சுவீடன் நாட்டு அரசரை சந்தித்து பேச உள்ள மோடி, மாலையில் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொள்ள உள்ளார்.

30 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு, இந்திய பிரதமர் ஒருவர் சுவீடன் நாட்டிற்கு சென்றுள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

PIB/Twitter

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...