14 வயது சிறுமியை மணக்க நீதிமன்றத்தை நாடிய 15 வயது சிறுவன்: ஆச்சரிய தீர்ப்பு

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

இந்தோனேசியாவில் 15 வயது சிறுவன், 14 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்ள நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

தெற்கு Sulawesi-ஐ சேர்ந்த 15 வயது சிறுவனும், 14 வயது சிறுமியும் காதலித்து வந்தார்கள்.

இந்நிலையில் சட்டபூர்வமாக திருமணம் செய்து கொள்ள இருவரும் நீதிமன்றத்தை அணுகினார்கள். அந்நாட்டு சட்டப்படி ஆணுக்கு 19 மற்றும் பெண்ணுக்கு 16 என்பதே திருமண வயதாகும்.

ஆனால் இவர்கள் விடயத்தில் நீதிமன்றம் விதிவிலக்கு அளித்து திருமணத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இது குறித்து நீதிமன்றத்தில் உள்ள ஒரு அதிகாரி கூறுகையில், குறித்த சிறுவன் மற்றும் சிறுமியை யாரும் திருமணம் செய்ய சொல்லி கட்டாயப்படுத்தவில்லை, சிறுமியின் தாய் சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார், தந்தையும் அதிகம் அவரோடு இருப்பதில்லை.

இதனால் தனக்கு துணை வேண்டும் என சிறுமி கோரிக்கை வைத்தார். இதோடு சிறுமி கர்ப்பமாக இல்லை என்பதும் உறுதியாகியுள்ளது.

இதையெல்லாம் வைத்து விலக்கு அளித்து இந்த முடிவை நீதிமன்றம் எடுத்துள்ளது என கூறியுள்ளார்.

இந்நிலையில் திருமணத்துக்கு முன்பான கவுன்சிலிங் வகுப்பில் இருவரும் சேரவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers