சிரியா தாக்குதல்: 3 நாடுகளுக்கும் தகுந்த பாடம் புகட்டப்படும் - ரஷ்யா அதிரடி வியூகம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
1244Shares
1244Shares
ibctamil.com

சிரியா மீது அதிரடி தாக்குதலில் ஈடுபட்ட அமெரிக்க கூட்டணி நாடுகளுக்கு தகுந்த பாடம் புகட்டப்படும் என ரஷ்ய பகிரங்கமாக அறிவித்துள்ளது.

சிரியா தாக்குதலை அடுத்து வல்லரசு நாடுகளாக கருதப்படும் அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே பதட்டம் பெருமளவு அதிகரித்துள்ளது.

சிரியா மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் நாடுகள் கண்டிப்பாக பதில் கூறியே தீர வேண்டும் என குறிப்பிட்டுள்ள ரஷ்ய போக்குவரத்து துறை அமைச்சர்,

தற்போதைய நிலையில் எங்களது வியூகம் என்ன என்பதை வெளியிடமுடியாது எனவும், ஆனால் எங்கள் திட்டங்கள் குறித்த 3 நாடுகளையும் கடுமையாக பாதிக்கும் வகையில் அமையும் என்பது மட்டும் உறுதி என அவர் தெரிவித்துள்ளார்.

சிரியாவில் ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறி, அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் நாடுகள் சிரியா மீது கூட்டு தாக்குதல் நடத்தியது.

இந்த நிலையில், பிரித்தானிய பாராளுமன்றத்தில் பேசிய பிரத்தானிய பிரதமர் தெரசா மே, அமெரிக்க ஜனாதிபதி கேட்டுக் கொண்டதால் மட்டுமே சிரியா தாக்குதலுக்கு ஒப்புதல் அளித்தோம் எனவும்,

ஆசாத் அரசால் நச்சு வாயு தாக்குதலுக்கு உள்ளான அப்பாவி மக்களின் பரிதாப நிலை தம்மை கடுமையாக பாதித்தது எனவும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

சிரியா தாக்குதலுக்கு பின்னர் பேசிய பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான், சிரியா மீதான தாக்குதல் என்பது 3-வது உலகப் போருக்கான ஆயத்தமல்ல எனவும், இது ஆசாத் அரசின் கண்மூடித்தனமான போக்குக்கு முட்டுக்கட்டை போடும் ஒரு எச்சரிக்கை மட்டுமே எனவும் தெரிவித்தார்.

ஆனால், அமெரிக்கா மட்டும் கடும் சொற்களை பயன்படுத்தி, சிரியா தாக்குதல் கட்டாயம் தேவை எனவும், மேலும் தாக்குதலுக்கு அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் பகிரங்கமாக சிரியா அரசுக்கும் ரஷ்யாவுக்கும் எச்சரிக்கை விடுத்தது.

சிரியா தாக்குதலுக்கு பின்னர் ரஷ்ய ஜனாதிபதி புடின் இதுவரை எந்த கருத்துக்களும் வெளிப்படையாக தெரிவிக்காதது உலக பார்வையாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் இந்த ஆழ்ந்த மெளனம் என்பது எதிர்வரும் நாட்களில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தலாம் என அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே சிரியா மீதான அமெரிக்க கூட்டுப்படைகளின் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு நாடுகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன.

பிரித்தானிய பிரதமர், பிரான்ஸ் ஜனாதிபதி மற்றும் அமெரிக்க ஜனாதிபதியின் புகைப்படங்களை பொதுவெளியில் எரித்தும் கலவரங்களில் ஈடுபட்டும் தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டி வருகின்றனர் மக்கள்.

you my like this video

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்