7 சிங்கங்களுக்கிடையே சிக்கிக் கொண்ட முள்ளம் பன்றி: இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?

Report Print Santhan in ஏனைய நாடுகள்
348Shares
348Shares
lankasrimarket.com

தென் ஆப்பிரிக்காவில் அருகிலே முள்ளம் பன்றி இருந்த போது, அதை ஒன்றுமே செய்ய முடியாமல் ஏழு சிங்கங்கள் பரிதாபமாக நடந்து சென்ற அரிய வகை வீடியோ வெளியாகியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் உள்ள தேசிய பூங்காவில் இரவு நேரத்தில் ஏழு சிங்கங்களுக்கிடையில் முள்ளம் பன்றி ஒன்று மாட்டிக் கொண்டது.

உடனடியாக முள்ளம் பன்றி தன்னுடைய பாதுக்காப்பிற்கு பயன்படுத்தும் உடலில் இருக்கும் முட்களை வெளிப்படுத்தி அதை கவச குண்டலமாக பயன்படுத்திக் கொண்டது.

முள்ளம் பன்றியை வேட்டையாட துடிக்கும் அந்த சிங்கங்கள் அதன் அருகில் செல்கின்றன. ஆனால் முட்கள் சிங்கங்களை நெருங்கவிடாமல் தடுத்ததால், தொடர்ந்து போராடிய சிங்கங்கள் அதன் பின் ஒன்றும் செய்ய முடியாமல் பரிதாபமாக நடந்து சென்றன.

இந்த காட்சியை பூங்காவிற்கு சென்ற சுற்றுலா வாசிகள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்