இன்றைய ஏவுகணை தாக்குதலில் இருந்து சிரியாவை காப்பாற்றிய ரஷ்யா! எப்படி தெரியுமா?

Report Print Athavan in ஏனைய நாடுகள்
1691Shares
1691Shares
ibctamil.com

அமெரிக்க கூட்டுப்படைகளின் தாக்குதல் குறித்து ரஷ்யா, சிரியாவுக்கு உளவு சொன்னதாலேயே மாபெரும் சேதம் தவிர்க்கப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது.

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிரான உள்நாட்டு போரில், அவருக்கு ஆதரவாக ரஷ்யா, ஈரான் நாடுகளும், அவருக்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளும் கரம் கோர்த்து சண்டையிட்டு வருகின்றன.

சொந்த குடிமக்கள் மீது சிரியா அரசு ரசாயன ஆயுத தாக்குதல் நடத்துவதாக குற்றம்சாட்டிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரசாயன ஆயுத கிடங்குகளை அழிக்கும் நோக்குடன் சிரியாவில் தாக்குதல் நடத்தவுள்ளதாக அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 4 மணிக்கு சிரியா தலைநகர் டமாஸ்கஸ் மீது அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் தாக்குதலை தொடங்கின, வான் வழி மற்றும் கடல் வழி ஏவுகணை தாக்குதலில் கூட்டுப் படைகள் ஈடுபட்டுள்ளன.

தலைநகர் டமாஸ்கசில் உள்ள அறிவியல் ஆராய்ச்சி மையம், மேற்கு ஹோம்சில் உள்ள ரசாயன ஆயுதக் கிடங்கு மற்றுமொரு ஆயுத சேமிப்புக் கிடங்கை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. டொமாஹாக் ரக ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்படுகிறது.

சிரியா ராணுவமும் தனது நட்பு நாடுகளுடன் எதிர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. தற்போது வரை 100க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை கடல் வழியாகவும், வான் வழியாகவும் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் ஏவி இருப்பதாகவும், அவற்றில் பலவற்றை இடைமறித்து தாக்கி அழித்து விட்டதாகவும் சிரியாவும், ரஷ்யாவும் தெரிவித்துள்ளன.

சிரியா மீது அமெரிக்கா அதிரடியாக தாக்குதல் நடத்தலாம் என ரஷ்யா உளவுத்துறையினர் ஏற்கனவே எச்சரித்து இருந்ததால், தற்காப்பு நடவடிக்கையாக முக்கியமான ராணுவ முகாம்கள் மற்றும் ஆயுத கிடங்குகளை நாங்கள் முன்னரே காலி செய்து விட்டோம் என அரசுப் படைகளுக்கு ஆதரவான மூத்த ராணுவ உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார், இதனால் மாபெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்