ஒரு வயது குழந்தையை வீட்டின் மாடியில் இருந்து கீழே வீசிய கொடூர தந்தை

Report Print Santhan in ஏனைய நாடுகள்
218Shares
218Shares
ibctamil.com

தென் ஆப்பிரிக்காவில் ஒரு வயது குழந்தையை கீழே தூக்கி எறிந்த தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் Port Elizabeth அருகே உள்ள Kwadwesi பகுதியின் Joe Slovo-வில் 90-க்கும் மேற்பட்ட சட்ட விரோதமாக கட்டப்பட்ட குடிசைகள் மற்றும் கட்டிடங்கள் இடிப்பதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனால் அங்கிருக்கும் மக்கள் இதற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 38-வயது மதிக்கத்தக்க தந்தை ஒருவர் தன்னுடைய ஒரு வயது குழந்தையை வீட்டின் மேல் ஏறி நின்று தூக்கி வீசப் போவதாக மிரட்டியுள்ளார்.

போராட்டம் நடைபெற்று வருவதால், அங்கு இருந்த பொலிசார், குழந்தையை காப்பாற்றுவதற்கு அவரிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் இந்த பேச்சு வார்த்தை தொடர்ந்து கொண்டே போனதே தவிர, அந்த தந்தை குழந்தையை அவனது தந்தை கீழே வீசுவதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

இதனால் குழந்தையை கீழே போட்டுவிடக் கூடாது என்பதற்காக பொலிசார் அவரிடம் போராடி வந்தனர். பொலிசார் ஒருவர் அவரிடம் பேசிக்கொண்டிருந்த போது, கீழே குழந்தையை பிடிப்பதற்கான அனைத்து வேலைகளையும் செய்து முடித்தனர்.

அதன் பின் தந்தையின் அருகே இருந்த பொலிசார் அவர் அருகில் சென்றவுடன், அவர் உடனடியாக குழந்தையை கீழே வீசினார்.

அப்போது கீழே இருந்த பொலிசார் குழந்தையை பத்திரமாக பிடித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து தந்தையை கைது செய்த பொலிசார் அவர் மீது கொலை முயற்சி வழக்கை பதிவு செய்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்