கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் சாலையில் சென்ற இருவர் படுகாயம்

Report Print Athavan in ஏனைய நாடுகள்

சீனாவில் கடை ஒன்றில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் இருவர் படுகாயம் அடைந்தனர். கடையில் இருந்து தீ கொழுந்துவிட்டு எரியும் வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

சீனாவின் ஸாங்டாங் (Shandong) பகுதியில் உள்ள ஸிபோ (Zibo) நகரில் அந்நாட்டு நேரப்படி வெள்ளியன்று காலை 9 மணிக்கு இந்த திடீர் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் அவ்வழியே சாலையில் நடந்தும், வாகனத்திலும் சென்று கொண்டிருந்தவர்கள் இந்த தீயில் சிக்கி காயம் அடைந்தனர்.

இதில் இருவருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து சீனா பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டுள்ளனர்.

கடையில் இருந்து ஃபிரீஸரில் வேதியியல் மாற்றம் ஏற்பட்டதன் காரணமாக இந்த வெடி விபத்து நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

வீடியோவை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும்

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்