மேற்கத்திய நாடுகளுக்கு சிரியா அதிபர் எச்சரிக்கை

Report Print Athavan in ஏனைய நாடுகள்

சிரியாவில் ஏவுகனைகள் வீசப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ள நிலையில் சிரியா அதிபர் பஷார் அல்-ஆசாத் மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிரியாவில் அதிபர் பஷார் அல்-ஆசாத்தின் அரசு படைகளும் இதற்கு எதிராக கிளர்ச்சியாளர்களான ISIS தீவரவாத குழுக்களின் படைகளும் கடுமையான உள்நாட்டு போரில் ஈடுபட்டுள்ளனர். இதில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி சிரியா குடிமக்கள் பலி ஆகியுள்ளனர்.

அதிபர் ஆசாத் படைகளுக்கு ரஷ்யாவும், கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகள் சிலவும் ஆதரவளித்து வருகின்றன.

இந்நிலையில், கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள டவுமா பகுதியில் கடந்த வாரம் நடத்திய ரசாயன தாக்குதலில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாயினர். சமீபகாலமாக கிளர்ச்சியாளர்கள் தாங்கள் பிடித்து வைத்திருந்த பகுதிகளை விட்டு பின்வாங்குவதால் சிரியாவில் அதிபர் அசாத்தின் கை ஓங்கியுள்ளது.

இந்நிலையில், சிரியா அதிபர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “சிரியா மீது ராணுவ தாக்குதல் நடத்தப் போவதாக சில மேற்கத்திய நாடுகள் மிரட்டல் விடுத்துள்ளன. அவ்வாறு நடவடிக்கை எடுத்தால் இந்தப் பிராந்தியத்தில் நிலைமை மோசமடையும்” என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்