Doner kebab-களில் நாய்க்கறி! வசமாக சிக்கிக் கொண்ட அகதி

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் நாயை கொன்று தோலை உரித்துக் கொண்டிருந்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கஜகஸ்தானை சேர்ந்த வாலிபர் Nikolay(வயது 20), சட்டவிரோதமான முறையில் ரஷ்யாவில் அகதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் Chelyabinsk-வில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் Nikolay-யை நாயுடன் சில இளைஞர்கள் பார்த்துள்ளனர்.

நாயின் கழுத்தை நெறித்துக் கொன்று, தோலை உரிப்பதை பார்த்ததும் உடனடியாக பொலிசுக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த அதிகாரிகள் Nikolay-யை கைது செய்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

இதுவரையிலும் நூற்றுக்கும் மேற்பட்ட siberian husky வகை நாய்களை கொன்றுள்ளதாகவும், Doner kebab கடைகளில் விற்று பணம் சம்பாதிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் கஜகஸ்தானில் வாழ்ந்த போது நாய்களை கொன்று சமைத்து சாப்பிடுவது சகஜம் எனவும் தெரிவித்துள்ளார்.

அன்றைய தினம் இரவு சிறையில் இருந்து விடுதலையான பின்னரும், நாய்களை கொல்ல முயன்றுள்ளார்.

இதனை விலங்கு நல ஆர்வலர்கள் தடுத்து நிறுத்தியதுடன், Nikolay மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டுமென பொலிசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் Nikolay-யை கஜகஸ்தானுக்கு நாடு கடத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்