ரசாயன தாக்குதலால் சிறுவர்கள் துடித்தனரா? வீடியோவால் வெளிச்சத்துக்கு வந்த உண்மை

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

சிரிய ஆட்சியின் எதிர்ப்பாளர்களால் ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டு சிறுவர், சிறுமிகள் துடிப்பது போன்ற வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் அது போலி என தெரியவந்துள்ளது.

ஏப்ரல் 7-ஆம் திகதியிலிருந்து சிரிய ஜனாதிபதி பஷர் அல் அசாதின் ஆதரவாளர்களால் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் பரப்பப்பட்டு வந்தது.

அதில், ஒரு பெரிய அறையில் சிறுவர்கள் சிலர் பந்து விளையாடுகின்றனர். அவர்கள் அருகில் நாற்காலியில் சிலர் உட்கார்ந்திருந்த நிலையில் திடீரென அங்கிருந்த சிறுவர்கள் எல்லாரும் கீழே விழுகிறார்கள்.

அதில் பலர் மூச்சு விட திணறுவது போலவும், பலர் மயக்கமடைந்தது போலவும் உள்ளார்கள்.

பின்னர் அங்கு வெள்ளை ஆடையில் இருக்கும் சிலர் சிறுவர்களுக்கு மருத்துவ உதவியளித்து செயற்கை சுவாசம் அளிப்பது போல வீடியோவில் உள்ளது.

இறுதியில் எல்லாரும் எழுந்து நிற்கிறார்கள்.

சிரிய ஆட்சியின் எதிர்ப்பாளர்கள் சமீபத்தில் மேற்கொண்ட ரசாயன தாக்குதல் காரணமாக சிறுவர்கள் இந்த நிலைக்கு ஆளானதாக பஷர் அல் ஆதரவாளர்கள் சார்பில் செய்தி பரப்பப்பட்டு வந்தது.

இந்நிலையில் குறித்த வீடியோ கடந்த 2013-ல் எடுக்கப்பட்டது எனவும் இது போன்ற ரசாயன தாக்குதல் நடந்தால் அதிலிருந்து எப்படி பாதுகாத்து கொள்வது என சமூக ஆர்வலர்கள் நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளதும் தற்போது தெரியவந்துள்ளது.

வீடியோவில் இருக்கும் சிறுவர்கள் மற்றும் வெள்ளை உடையில் இருக்கும் மருத்துவர்கள் என அனைவரும் ரசாயன தாக்குதலில் பாதிக்கப்பட்டிருப்பது போல நடித்துள்ளனர்.

இந்த வீடியோவை தான் சில எடிட்கள் செய்து பஷர் அல் ஆதரவாளர்கள் வேறுவிதமாக சித்தரித்திருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்