உலகில் மிகவும் மதிக்கப்படும் நபர்களின் பட்டியல் வெளியானது: முதலிடம் யார் தெரியுமா?

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

உலகில் மிகவும் மதிக்கப்படும் நபர்களின் பட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி ஆகியோர் முதலிடத்தில் உள்ளனர்.

குறித்த பட்டியலில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பாரக் ஒபாமா இரண்டாவது இடத்திலும், தற்போதைய ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் 17-வது இடத்திலும் உள்ளனர்.

கால்பந்து உச்ச நட்சத்திரங்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லியோனல் மெஸ்ஸி ஆகிய இருவரும் முறையே 10 மற்றும் 11-வது இடத்தில் உள்ளனர்.

பிரித்தானியர்களால் அதிகம் மதிக்கப்படும் நபர்களாக ராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் டேவிட் அட்டன்பரோ ஆகியோர் உள்ளனர்.

மட்டுமின்றி பிரித்தானிய அரச குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களில் இளவரசர் ஹரி 4-வது இடத்திலும், இளவரசர் வில்லியம் 7-வது இடத்திலும் இளவரசர் பிலிப் 9-வது இடத்திலும் உள்ளனர்.

கடந்த மாதம் காலமான பிரித்தானிய விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் 3-வது இடத்தில் உள்ளார். கத்தோலிக்க மத தலைவர் திருத்தந்தை பிரான்சிஸ் 16-வது இடத்தில் உள்ளார்.

இதேபோன்று உலகில் மதிக்கப்படும் பெண்களின் பட்டியலில் பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலிக்கு அடுத்து 2-வது இடத்தில் மிட்சல் ஒபாமா உள்ளார்.

4-வது இடத்தில் பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபெத், 5-வது இடத்தில் ஹில்லரி கிளிண்டன் உள்ளார். 15-வது இடத்தில் பிரித்தானிய பிரதமர் தெரெசா மே உள்ளார்.

உலகமெங்கும் மொத்தம் 35 நாடுகளில் உள்ள 37,000 மக்களிடம் கேட்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் குறித்த பட்டியலை YouGov நிறுவனம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகில் மதிக்கப்படும் ஆண்கள்:

 1. பில் கேட்ஸ்
 2. பாரக் ஒபாமா
 3. ஜாக்கி சான்
 4. ஜி ஜிங்பிங்
 5. ஜாக் மா
 6. விளாட்மிர் புடின்
 7. தலாய் லாமா
 8. நரேந்திர மோடி
 9. அமிதாப் பச்சன்
 10. கிறிஸ்டியானோ ரொனால்டோ

உலகில் மதிக்கப்படும் பெண்கள்:

 1. ஏஞ்சலினா ஜோலி
 2. மிட்சல் ஒபாமா
 3. ஒபரா வின்ப்ரே
 4. இரண்டாம் எலிசபெத்
 5. ஹில்லரி கிளின்டன்
 6. எம்மா வாட்ஸன்
 7. மலாலா யூசப்சையி
 8. ஏஞ்சலா மெர்க்கெல்
 9. டெய்லர் ஸ்விஃப்ட்
 10. மடோனா

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்