சீனாவில் ராணுவத்தில் இருந்து வெளியேறுபவர்களுக்கு தண்டனை என்ன தெரியுமா?

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

சீனாவில் ராணுவத்திலிருந்து பணிபுரிய மறுக்கும் மற்றும் இடையிலேயே வெளியேறும் இளைஞர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

கிழக்கு சீனாவின் புஜியான் மாகாணத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் தாங்களாகவே முன் வந்து ராணுவத்தில் சேர்ந்தனர்.

சேர்ந்த சில மாதங்களில் ராணுவத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்தனர். தாங்கள் ராணுவத்தில் பணிபுரிய தகுதியற்றவர்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நான்கு இளைஞர்களும் ராணுவ சட்டத்தை மீறியதாகவும், சமுதாயத்தில் தவறான எண்ணத்தை ஏற்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

மட்டுமின்றி நான்கு பேருக்கும் 50 ஆயிரம் யுவான் அபராதம் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் வேலை செய்ய தடை உள்ளிட்ட தண்டனை வழங்கப்பட்டது. இதேபோன்று மற்றவர்களும் தண்டனை வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...