எதிரியை பழிவாங்க இப்படியா செய்வது? ஹோட்டலில் இருக்கும் சூப்பில் சிறுநீர் கழித்த முதலாளி

Report Print Santhan in ஏனைய நாடுகள்
267Shares

சீனாவில் தன்னுடைய பக்கத்து ஹோட்டல் முதலாளியை பழிவாங்க வேண்டும் என்பதற்காக அவர் உணவகத்தின் சூப்பில் பிரபல ஹோட்டல் முதலாளி சிறுநீர் கழித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் பெரும்பாலான உணவகங்களில் சூப் மிகவும் பிரபலம்,அதுவும், மாட்டிறைச்சியால் செய்யப்படும் சூப்பை சீனா மக்கள் பெரும்பாலும் விரும்பி உண்பார்கள் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் சீனாவின் பிரதான சாலையில் உள்ள டாங்கிபை என்ற உணவகத்தில் தயாரிக்கப்படும் சூப்பை குடிப்பதற்காக நாள் தோறும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் வந்து சென்றுள்ளனர்.

இதைக் கண்ட பக்கத்து ஹோட்டல் முதலாளி அவரை பழிவாங்க வேண்டும் எனவும், அவரது ஹோட்டலுக்கு மக்கள் யாரும் போகக் கூடாது என்பதற்காக, கடந்த 3-ஆம் திகதி யாருக்கும் தெரியாமல் அவர்களது உணவகத்திற்குள் சென்று, அவர்கள் தயாரிக்கும் உணவில் மிகவும் பிரபலமான சூப்பில் அளவில்லாத உப்பு, காரத்தை கலந்துள்ளார்.

இருப்பினும் ஆத்திரம் தீராத அவர் சூப்பில் சிறுநீரும் கழித்துள்ளார். மறுநாள் காலை சூப்பில் இருந்து மோசமான வாடை வந்ததால், சூப்பை கீழே ஊற்றிவிட்டதுடன், கடைக்கு விடுமுறை அளித்துள்ளனர்.

இது தொடர்பான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியதால் தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்