நோர்வே நகர மக்களை அலற வைத்த எச்சரிக்கை மணி

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
93Shares

ரஷ்ய எல்லையில் உள்ள நோர்வே நகரத்தில் திடீரென்று ஒலித்த எச்சரிக்கை மணியால் அங்குள்ள மக்கள் பயத்தில் உறைந்து போயுள்ளனர்.

ரஷ்ய எல்லையில் அமைந்துள்ளது நோர்வே நகரமான Vadso. இங்கு திடீரென்று ஒலித்த எச்சரிக்கை மணியால் பொதுமக்கள் செய்வதறியாது திகைத்துள்ளனர்.

இதில் ரஷ்ய ராணுவம் முன்னேறி வருவதாக யாரோ ஒருவர் பீதியை கிளப்ப மொத்த நகர மக்களும் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.

இதனையடுத்து சுதாரித்துக் கொண்ட சிலர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர். ஆனால் அப்பகுதியில் ரஷ்ய ராணுவத்தினர் எவரும் இல்லை என பொலிஸ் தரப்பு பின்னர் உறுதி செய்துள்ளது.

எச்சரிக்கை மணி திடீரென்று ஒலித்ததும், சில நிமிடங்களில் அது நிறுத்தப்பட்டதும் ஏன் என்று அங்குள்ள மக்களுக்கு இதுவரை பிடிபடவில்லை.

Vadso நகர மக்களுக்கு ரஷ்ய மக்களின் நகர்வுகளை தொலை தூரத்தில் இருந்தே காண முடியும். மட்டுமின்றி நகரத்தின் முக்கிய பகுதிகள் அனைத்திலும் எச்சரிக்கை மணி பொருத்தப்பட்டுள்ளது.

புதன்கிழமை இரவு சுமார் 11.50 மணிக்கு ஒலித்த அந்த எச்சரிக்கை மணியானது அருகாமையில் உள்ள தீ விபத்து மீட்பு குழுவினரின் அலுவலகத்தில் இருந்து வந்தது என பின்னர் தெரிய வந்துள்ளது.

இதனிடையே பலரும் ரஷ்ய ராணுவம் தாக்குதலை தொடுத்துள்ளது, காப்பாற்றுங்கள் என கேட்டு தொலைபேசி வழியாக பொலிசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்