நாடு விட்டு நாடு எச்.ஐ.வி கிருமியை பரப்பிய பாலியல் தொழிலாளி: சிக்கியது எப்படி?

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

தாய்லாந்தை சேர்ந்த எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட பாலியல் தொழிலாளி தைவானுக்கு சென்று வாடிக்கையாளர்களுடன் உறவு கொண்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பட்டி (24) என்ற தாய்லாந்தை சேர்ந்த பாலியல் தொழிலாளி கடந்த மாதம் 11-ஆம் திகதி பார்வையாளர் விசாவில் தைவானுக்கு சென்றுள்ளார்.

பின்னர் 13-ஆம் திகதியிலிருந்து 22-ஆம் திகதி வரை அங்குள்ள ஆண் வாடிக்கையாளர்களுடன் பட்டி, பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது தைவான் அதிகாரிகள் பட்டியை பிடித்து விசாரித்து மருத்துவ பரிசோதனை செய்தார்கள்.

அப்போது பட்டிக்கு எச்.ஐ.வி கிருமி பாதிப்பு இருப்பது உறுதியானது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட பட்டியை அதிகாரிகள் தாய்லாந்துக்கு 2-ஆம் திகதி நாடு கடத்தினார்கள்.

இந்நிலையில் தைவான் சுகாதார துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கையில், பட்டியுடன் உறவு கொண்ட வாடிக்கையாளர்கள் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பற்ற முறையில் பட்டியுடன் உறவு கொண்டவர்களுக்கு எச்.ஐ.வி பரவியிருக்க அதிக வாய்ப்புள்ளது என்ற அடிப்படையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்