எனது விமானம் வெடித்துச் சிதறினால்... அமெரிக்காவை கேளுங்கள்: பகீர் கிளப்பிய பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ டூடெர்டே சமீபத்தில் பொதுகூட்டம் ஒன்றில் பேசும் போது, நான் பயணிக்கும் விமானம் வெடித்துச் சிதறவோ, அல்லது நான் பயணிக்கும் வாகனத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டாலோ, அமெரிக்கா உளவுத்துறையை கேள்வி கேளுங்கள் என கூறியுள்ளது உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுத கொள்முதலுக்கு அமெரிக்கா தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருவதால் சீனா மற்றும் ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்கள் பெற்றுக் கொள்ள பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியாக கடந்த 2016 ஆம் ஆண்டு யூன் மாதம் பொறுப்பேற்றது முதல் ரோட்ரிகோ டூடெர்டெ அமெரிக்காவிடம் நவீன ஆயுதங்களை வழங்குமாறு கோரிக்கை விடுத்து வருகிறார்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் அதிகரித்து வரும் ஐ.எஸ் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தவே நவீன ஆயுதங்களை கோருவதாக ரோட்ரிகோ தெரிவித்துள்ளார். ஆனால் பிலிப்பைன்ஸ் நாட்டில் நடந்தேறும் மனித உரிமை மீறல்களை கருத்தில் கொண்டு அமெரிக்கா தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறது.

இந்த நிலையில் மீனவர்கள் மற்றும் விவசாயிகள் குழுக்களுடன் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ரோட்ரொகோ, அமெரிக்காவை இனி நம்பி இருப்பது வீண். சீனா மற்றும் ரஷ்யா நமது கோரிக்கையை பரிசீலிப்பதாக கூறியதுடன், இலவசமாக குறிப்பிட்ட ஆயுதங்களை வழங்கவும் முன்வந்துள்ளது என்றார். இதனால் நமது உண்மையான நண்பனை நாம் தெரிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் வந்துள்ளோம்.

மட்டுமல்ல, நான் பயணிக்கும் விமானம் வெடித்துச் சிதறவோ, அல்லது நான் பயணிக்கும் வாகனத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டாலோ, பிலிப்பைன்ஸ் மக்கள் அமெரிக்கா உளவுத்துறையை கேள்வி கேளுங்கள் என தெரிவித்துள்ளார் ரோட்ரிகோ.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்