மூன்று மணி நேரம் நின்ற இதயத் துடிப்பு: 8 வயது சிறுவனுக்கு மறுவாழ்வு கொடுத்த மருத்துவர்கள்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

மூன்று மணி நேரம் நின்ற ரஷ்ய சிறுவனின் இதயத் துடிப்பை மீட்டு மறுவாழ்வு கொடுத்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

ரஷ்யாவைச் சேர்ந்த பெண் புய்யாக்கின் ஏகடெரினா. இவருக்கு மாஸ்டர் ரோமன் என்ற மகன் உள்ளார்.

மாஸ்டர் ரோமனுக்கு 3 முறை இதய செயலிழப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிகிச்சைக்காக சிறுவன் சென்னை போர்டிஸ் மலர் மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்த போது, சிறுவனின் இதயம் தீடீரென்று தன்னுடைய செயல்பாட்டை நிறுத்தியுள்ளது.

சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நின்ற இதயத் துடிப்பை மருத்துவர்கள் எக்மோ சிகிச்சை மூலம் இதயத் துடிப்பை மீட்டு இதய மாற்று அறுவை சிகிச்சை மூலம் சிறுவனுக்கு மறுவாழ்வு கொடுத்துள்ளனர்.

3 மணி நேரத்திற்கும் மேலாக இதயம் தனது துடிப்பை நிறுத்திய போதும் இதய செயல்பாட்டினை மீட்டு சிறுவனுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்ட நிகழ்வு இதுவரை உலகில் வேறெங்கும் நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் ரஷ்ய நாட்டு சிறுவன் ரோமன் புய்யான்கின் மற்றும் அவரது தாயார் புய்யாக்கின் ஏகடெரினா ஆகியோர் தமிழகத்தின் சிறப்பான மருத்துவ கட்டமைப்பு, அரசின் உடலுறுப்பு தானம் மற்றும் இது போன்ற சிறப்பு வகை அறுவை சிகிச்சைகளுக்கு உறுதுணையாக இருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்