துருக்கி பல்கலைக்கழகத்தில் மர்ம நபர் துப்பாக்கி சூடு: 4 பேர் உயிரிழப்பு

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
48Shares

துருக்கியில் உள்ள பிரபல பல்கலைக்கழகத்தில் நுழைந்த மர்ம நபர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

துருக்கியில் அமைந்துள்ள Osmangazi பல்கலைக்கழகத்தில் நுழைந்த மர்ம நபர் அங்கிருந்த பல்கலைக்கழக துணைத் தலைவரை சுட்டுக் கொன்றுள்ளார்.

பின்னர் பல்கலைக்கழக நிர்வாகி ஒருவரையும் சுட்டுக் கொன்றுள்ள அவர் 2 ஆசிரியர்களையும் கொன்றுள்ளார்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பொலிசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை காரணமாக தொடர்புடைய நபர் கைதாகியுள்ளார்.

குறித்த பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவரான அந்த நபரிடம் தற்போது அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

துப்பாக்கி சூடு சம்பவத்தின் நோக்கம் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகாத நிலையில், பல்கலைக்கழகம் முழுவதும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

மாணவர்களும் பேராசிரியர்களும் அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் பல்கலைக்கழகத்தின் முக்கிய வாசலில் குவிந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த தாக்குதலில் 3 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களை மீட்டு பொலிசார் மருத்துவமனைக்கு சேர்ப்பித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

தாக்குதல் நடத்தப்பட்ட Eskisehir நகரில் மொத்தம் ஒரு மில்லியன் மக்களே குடியிருந்து வருகின்றனர். இந்த நகரமானது தலைநகர் இஸ்தான்புல்லுக்கும் அங்காரா பகுதிக்கும் இடையே அமைந்துள்ளது.

குர்து போராளிகளாலும் ஐ.எஸ் பயங்கரவாதிகளாலும் துருக்கி தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகிறது.

ஆனால் இன்று நடந்த பல்கலைக்கழக துப்பாக்கி சூடானது பயங்கரவாத தொடர்பானதா என்பது குறித்து விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்