தடை செய்யப்பட்ட பொருட்களை பரிசாக பெற்ற வடகொரிய அதிபர்: மொத்த மதிப்பு என்ன தெரியுமா?

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
425Shares

சீனாவுக்கு 2 நாள் பயணமாக மனைவியுடன் சென்றிருந்த வடகொரிய தலைவருக்கு தடை செய்யப்பட்ட பொருட்களை பரிசாக வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் மேற்கொள்ளும் சந்திப்பு மிக விரைவில் இருக்கும் என தகவல்கள் பரபரப்பாக வெளியான நிலையில்,

திடீரென்று மனைவியுடன் சீனாவுக்கு விஜயம் செய்துள்ளார் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்.

அரசு முறை பயணமல்ல இதுவென வடகொரியா சார்பில் தெரிவித்திருந்தாலும், வடகொரிய தலைவராக பொறுப்பேற்ற பின்னர் கிம் ஜாங் உன் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.

இந்த நிலையில் பயணத்தின் இறுதி நாளில் சீன ஜனாதிபதி ஜிங்பிங் மற்றும் அவரது மனைவி ஆகியோர் இணைந்து தங்கள் விருந்தினர்களுக்கு சிறப்பு பரிசுகளை வழங்கி கெளரவித்துள்ளனர்.

சில்க் ஆடைகள், வேலைப்பாடு மிகுந்த நகைகள் மற்றும் 6 போத்தல்கள் Moutai மது என பட்டியல் நீளுகின்றது.

சீனா அளித்துள்ள பரிசு வகைகளில் பெரும்பாலானவை வடகொரியாவுக்கு கொண்டு செல்லப்படுவதை சர்வதேச சமூகத்தால் தடை செய்யப்பட்டவையாகும்.

இந்த தடையானது கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் அமுலில் இருந்து வருகிறது. இருப்பினும் சீன ஜனாதிபதியால் குறித்த பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

சீன ஜனாதிபதியால் வடகொரிய தலைவருக்கு அளிக்கப்பட்ட மொத்த பரிசுகளின் மதிப்பு சுமார் 400,000 டொலர் என கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்