பிரித்தானியாவை அச்சுறுத்தும் வடகொரியாவின் NO-DONG 2 ஏவுகணை: எச்சரிக்கும் நிபுணர்கள்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
216Shares

பிரித்தானியாவின் முக்கிய பகுதிகளை தாக்கும் வல்லமை கொண்ட NO-DONG 2 ஏவுகணையை வடகொரியா அடுத்த சில மாதங்களில் தயாரித்துவிடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதே எச்சரிக்கையை பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களும் அவையில் வெளிப்படுத்தியுள்ளனர்.

குறித்த ஏவுகணையானது அணுஆயுதம் தாங்கும் திறன் படைத்தது எனவும், ஆனால் பிரித்தானியாவால் குறித்த ஏவுகணையை எதிர்கொள்ளும் திறன் தற்போதைய நிலையில் இல்லை எனவும், அதுபோன்ற ஏவுகணையை பிரித்தானியா வெற்றிகரமாக முறியடித்து நிரூபிக்கவில்லை எனவும் நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.

NO-DONG 2 போன்ற சக்தி வாய்ந்த ஏவுகணையை பிரித்தானியா மீது வடகொரியா ஏவும் என கருத முடியாது எனவும், காரணம் பிரித்தானியாவை அச்சுறுத்தும் நாடாக வடகொரியா பார்ப்பதில்லை எனவும் நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.

வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் மிகவும் கொடூர குணம் கொண்டவர் என்ற போதும் அவர் பகுத்தறிவாளர் என பிரித்தானிய நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.

பிரித்தானியா ஒருபோதும் வடகொரியாவுக்கு அச்சுறுத்தலாக இல்லாத நிலையில், வடகொரியா NO-DONG 2 போன்ற சக்தி வாய்ந்த ஏவுகணையை பிரித்தானியா மீது ஏவும் என கருதுவது தேவையற்ற குழப்பத்தையே உருவாக்கும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி வடகொரியாவின் முக்கிய எதிரிகளாக அமெரிக்காவும் தென் கொரியாவும் மட்டுமே இருப்பதாகவும், ஆனால் குறித்த பகுதியில் போர் மூளும் நிலை ஏற்பட்டால் ராணுவ உதவிகளை அளிக்க எந்த சட்டச் சிக்கலும் இருக்காது எனவும் நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.

தென் கொரியாவுடனோ அல்லது அமெரிக்காவுடனோ வடகொரியா போரை துவங்கும் எனில், பிரித்தானியா எப்போதும் தனியாக ஒதுங்கிவிடாது எனவும் நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வடகொரியா இதுவரை 6 முறை அணுஆயுத சோதனை மேற்கொண்டுள்ளது. மேலும் வடகொரியாவிடம் தற்போதிருக்கும் ஏவுகணையால் அமெரிக்காவின் முக்கிய பகுதிகளை தாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்