கணவருடன் வாழும் போதே வேறு நபரை மணந்த மனைவி: துடித்து போன கணவன்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்
418Shares

கென்யாவில் கணவருடன் வாழும் போதே வேறு நபரை திருமணம் செய்து கொண்ட மனைவியின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞர் ஒருவருக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமான நிலையில் மனைவியை ஏமாற்றி வேறு சில பெண்களுடன் தொடர்பில் இருந்துள்ளார்.

கணவரின் செல்போன் மூலம் இதை தெரிந்து கொண்ட மனைவி அதிர்ச்சியடைந்த நிலையில் கணவரை கண்டித்துள்ளார்.

ஆனால் மனைவியின் வார்த்தையை மதிக்காத கணவர் தனது செயலை தொடர்ந்துள்ளார்.

தொடர்ந்து கணவரை கெஞ்சியபடி இருந்த மனைவியின் செயலில் திடீர் மாற்றம் தெரிந்துள்ளது.

அதாவது, அழகாக உடையணிந்து மேக்கப் போட்டு கொண்டு வெளியில் செல்வது, கணவரை கண்டு கொள்ளாமல் இருப்பது என மனைவியின் நடவடிக்கை மாறியுள்ளது.

இதையடுத்து மனைவியை, கணவன் ரகசியமாக கண்காணித்த நிலையில், அவர் வேறு நபரை திருமணம் செய்து கொண்டு ரகசிய வாழ்க்கை வாழ்வது தெரியவந்து துடித்துள்ளார்.

தன் வாழ்வில் நடந்த இந்த நிகழ்வை கணவன் பேஸ்புக்கில் பதிவாக வெளியிட்டுள்ளார்.

அதில், மனைவி எப்படி வேண்டுமானாலும் போகட்டும் ஆனால் தான் உயிரையே வைத்துள்ள தனது இரண்டு மகள்கள் தன்னுடன் தான் இருக்க வேண்டும் எனவும் அதில் பதிவிட்டுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்