வலியால் துடித்த தாய் காண்டா மிருகம்: மருத்துவர்களை அருகில் விடாமல் குட்டி நடத்திய பாசப்போராட்டம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்
289Shares

வலியால் துடித்துக் கொண்டிருந்த தாய் காண்டாமிருகத்திடம், குட்டி காண்டாமிருகம் மருத்துவர்களை நெருங்கவிடாமல் செய்த செயல் வைரலாகி வருகிறது.

தென் ஆப்பிரிக்காவில் காட்டுப் பகுதியில் இருந்த தாய் காண்டா மிருகம் ஒன்று அடிபட்டு வலியால் துடித்துக் கொண்டிருந்துள்ளது.

இதை அறிந்த கால்நடை மருத்துவர்கள் அந்த காண்டா மிருகத்திற்கு சிகிச்ச்சை அளிக்க வந்துள்ளனர். அப்போது அந்த தாய் காண்டா மிருகத்துடன் இருந்த, குட்டி காண்டா மிருகம் அவர்களை நெருங்கவிடாமல் முட்டி தள்ளியபடியே இருந்தது.

அதுமட்டுமின்றி மிரட்டும் தொணியில் சத்தமிட்டு மருத்துவர்களை விரட்டவும் முயன்றதுடன், தாய் காண்டா மிருகத்தின் பின்னே சென்று முகத்தை வைத்து தட்டி எழுப்ப முயற்சித்தது.

குட்டியின் செயலால் முதலில் பயந்த மருத்துவர்கள் அதன் பின் அந்த குட்டி காண்டா மிருகத்தை சமாதானப்படுத்தி, தாய் காண்டா மிருகத்திற்கு சிகிச்சை அளித்தனர்.

தாயை மற்றவர்களிடம் காப்பாற்றுவதற்காக குட்டி காண்டா மிருகம் நடத்திய பாசப் போராட்டம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்