விமானநிலையத்தில் பயணியின் பணத்தை திருடிய ஊழியர்: கையும் களவுமாக பிடித்த பொலிசார்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

தாய்லாந்தில் உள்ள விமானநிலையத்தில் ஊழியர் பயணியின் பணத்தை திருடியிருக்கும் சம்பவம் பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த 89-வயது மதிக்கத்தக்க பயணி ஒருவர் தாய்லாந்தின் Bangkok-ல் உள்ள Suvarnabhumi விமானநிலையத்திற்கு வந்து இறங்கியுள்ளார்.

விமானநிலையத்தில் இறங்கிய அவர் பரிசோதிப்பதற்காக பரிசோதனை செய்யும் இடத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவர் தன்னிடமிருந்த பர்ஸ் மற்றும் லக்கேஜ்களை விமான நிலையர் ஊழியர் ஒருவரிடம் பரிசோதிப்பதற்காக கொடுத்துள்ளார்.

அந்த ஊழியர் உடனடியாக பர்சில் இருந்த பணத்தை உடனடியாக எடுத்து தன்னுடைய பாக்கெட்டில் போட்டுக் கொண்டார்.

பரிசோதனை முடிந்த பின்பு அந்த பயணி தன்னுடைய பர்சை பார்த்த போது, பணம் திருடு போயிருப்பதை அறிந்துள்ளார்.


இது குறித்து விமானநிலையத்தில் இருக்கும் உயரதிகாரிகளிடம் புகார் அளித்த போது, அவர்கள் உடனடியாக விமானநிலையத்தில் இருக்கும் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.

பொலிசார் அவரை பரிசோதித்த விமான ஊழியரிடம் விசாரணை மேற்கொண்ட போது, அவரிடம் 6,000 பாட் அதாவது 137 பவுண்ட் இருந்துள்ளது.

இது குறித்து கேட்ட போது அது தன்னுடைய பணம் என்று கூறியுள்ளார். அதன் பின் பொலிசார் அங்கிருக்கும் சிசிடிவி கேமாரவை ஆராய்ந்த போது இவர் திருடியதை உறுதிப்படுத்தினர். அந்த வீடியோவை காட்டிய பின்னர் தான் திருடியதை ஒப்புக் கொண்டுள்ளார்.

எதற்காக திருடினாய் என்று பொலிசார் கேட்ட போது, விமான நிலையத்திற்கு பணிக்காக வருவதற்கு தனக்கு அதிக அளவில் செலவு ஏற்படுவதாகவும், தன்னுடைய உடல் நிலை சரியில்லாத காரணத்தினாலும் பணத்தை திருடியதாகவும் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து அவர் பணி நீக்கம் செய்யப்பட்டதுடன், பொலிசார் அவரை விமானநிலையத்தில் இருக்கும் அறையில் அடைத்து வைத்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்