கணவருக்கு துரோகம் செய்த மனைவி: தவறான உறவால் பரிதாபமாக போன உயிர்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

வங்கதேசத்தில் காணமல் போனதாக கூறப்பட்ட வழக்கறிஞரை, அவரது மனைவி கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேசத்தைச் சேர்ந்தவர் ரதீஷ் சந்திர பவுமிக். இந்து வழக்கறிஞரான இவர் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென்று காணமல் போயுள்ளார்.

மிக முக்கியமான வழக்கில் அரசு வழக்கறிஞராக ஆஜர் ஆகியிருந்ததால், பொலிசார் இவரை தேடி வந்ததுடன், தீவிரவாதிகள் கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்தது.

தொடந்து நடத்தப்பட்டு வந்த விசாரணையில் ரதீஷின் உடல் அவரது வீட்டிற்கு அருகில் உள்ள கட்டுமானப்பணியில் உள்ள கட்டிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

உடலைக் கைப்பற்றிய பொலிசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த பின் அவரது மனைவியிடம் பொலிசார் கிடுக்குப் பிடி விசாரணை செய்துள்ளனர்.

அப்போது ரதீஷின் மனைவிக்கும், அவருடன் பணி புரிபவருக்கும் இடையே தவறான உறவி இருப்பதும், அதறகாக மனைவி ரதீஷை கொலை செய்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து ரிதீஷின் மனைவி உட்பட நான்கு பேரை பொலிசார் கைது செய்த பொலிசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்