ஐ.எஸ் மற்றும் அல் கொய்தா கூட்டணி: வெளியான அதிர்ச்சி தகவல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த ஐ.எஸ் மற்றும் அல் கொய்தா தீவிரவாத அமைப்புகள் இரண்டும் ஒன்றாக இணைந்து செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மட்டுமின்றி குறித்த இரு பயங்கரவாத அமைப்புகளும் ஒன்றிணைந்த பின்னர் கூட்டாக ரசாயன ஆயுதங்களை தயாரிக்கவும் அதற்கான ஆயத்த பணிகளை துவங்கியுள்ளதாகவும் ரஷ்ய உளவு அமைப்பின் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஒன்றிணையும் இந்த இரு அமைப்புகளுக்கும் உலகமெங்கும் கிளைகள் உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதன் வழியாக ரசாயன ஆயுதங்களை மிக ரகசியமாக தயாரிக்கவும் முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த இரு அமைப்புகளுக்கும் செயல்பாட்டில் இல்லாத மற்றும் செயல்பட்டில் உள்ள குழுக்கள் உலகமெங்கும் பல நாடுகளில் தற்போதும் இருப்பதாக கூறிய அவர், இதில் ஆயுதங்களை தயாரிக்கும் திறன்படைத்தவர்களும் உள்ளனர் என்ற பகீர் தகவலையும் வெளியிட்டுள்ளார்.

ஐ.எஸ் அமைப்பு முற்றாக அழிந்தது என கருதிவிட முடியாது என தெரிவித்துள்ள அவர், ஆண்டுக்கு 1600 பயங்கரவாத தாக்குதல்களை உலகெங்கும் நடத்திக் காட்டியவர்கள் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஐ.எஸ் அமைப்பு முழு வீச்சில் செயல்பட துவங்கியதன் பின்னர் இதுவரை சுமார் 150,000 உயிர்களை பலி கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது தங்களின் நிலையை தக்கவைத்துக் கொள்ளும் பொருட்டு உலக அரங்கில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டுள்ளனர் எனவும், ஆனால் மீண்டும் புது திட்டங்களுடன் அவர்கள் வருவார்கள் எனவும் ரஷ்ய உளவு அமைப்பின் தலைவர் Aleksandr Bortnikov எச்சரித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்