சிங்கப்பூரில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இந்திய ஆசிரியர்: தண்டனை அறிவிப்பு

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியர் தன்னிடம் யோகா பயிற்சி பெற வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நிலையில் அவருக்கான தண்டனையை நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ராகேஷ் குமார் பிரசாத் என்பவர் யோகா ஆசிரியராக இருந்த நிலையில் தன்னிடம் பயிற்சி பெற வந்த 25 வயதான பெண்ணிடம் தன் பலத்தை பயன்படுத்தி பலமுறை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

2015–ம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் தொடர்பாக அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில், ராகேஷ் மீது சிங்கப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அவர் மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் குற்றம் தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ராகேஷுக்கு 9 மாதம் சிறைத் தண்டனையும், ஆயிரம் சிங்கப்பூர் டொலர்கள் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

ராகேஷ் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதால், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

Credit: GAVIN FOO

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்