குடித்து விட்டு நடுரோட்டில் உருண்ட இளைஞன்: காப்பாற்றிய நண்பனுக்கு அபாரதம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்
170Shares
170Shares
ibctamil.com

குடித்துவிட்டு சாலையில் உருண்ட இளைஞனுக்கு உதவ போய் கடைசியில் நண்பன் பொலிசாரிடம் அபராதம் கட்டிய சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.

சீனாவைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் நன்றாக குடித்துவிட்டு, அங்கிருக்கும் சாலையில் வந்து உருண்டபடி இருந்துள்ளார். அதன் பின் அங்கிருக்கும் தடுப்பு பலகையை தலையால் முட்டியுள்ளார்.

இதைக் கண்ட அவரது நண்பர் உடனடியாக ஓடிவந்து அவரது கையை பிடித்து கீழே இழுத்துள்ளார். அப்போது பலகையும் அவருடன் சேர்ந்து விழுந்துள்ளது.

அதன் பின் நண்பரை பத்திரமாக வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். இந்தக் காட்சியை சிசிடிவி கேமராவில் பார்த்த பொலிசார் மறுநாள் அந்த இளைஞனின் வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டு அபராதம் விதித்துள்ளனர்.

அப்போது பொலிசார் குடித்த இளைஞரால் தடுப்புகள் கீழே விழவில்லை எனவும், நண்பர் இழுத்ததன் காரணமாக கிழே விழுந்ததாக கூறியதால் அவரது நண்பரே அபராதத் தொகை கட்டியுள்ளார்.

இதில் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் பொலிசார் விசாரிக்க சென்ற போது குடிந்த அந்த இளைஞன் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்