சிரியாவில் செத்து மடியும் குழந்தைகள்: உதவச்சென்ற தன்னார்வலர்களுக்கு நேர்ந்த பரிதாபம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல் அசாருக்கு எதிராக ஆயுதம் தாங்கி போரில் ஈடுபட்டு வரும், கிளர்ச்சிக்குழுக்கள், இராணுவத்தின் ஒரு பிரிவு ஆகியவற்றை ஒடுக்கும் பணியில் ஜனாதிபதி ஆதரவு படையினர் கடந்த 2012-ம் ஆண்டு முதல் ஈடுபட்டு வருகின்றனர்.

6 ஆண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டுச் சண்டையில் லட்சக்கணக்கான மக்கள் இதுவரை பலியாகியுள்ளனர்.

கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும், ஜனாதிபதிக்கு ஆதரவாக ரஷ்ய படைகளும் சண்டையிட்டு வந்த நிலையில் கிளர்ச்சிக்குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதை அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ நிறுத்தியது.

இதனால், அரசுப்படையினரின் கை ஓங்கிய நிலையில், கடந்த 18-ம் தேதி முதல் ஜனாதிபதி ஆதரவு படை - ரஷ்யா இணைந்து கிழக்கு கூட்டா பகுதியில் ஆவேச தாக்குதல்களை நடத்தியது.

அரசு படை நடத்திய தாக்குதுலில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 500 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். 500 பேர் கொல்லப்பட்டதில் 120-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அடங்குவர்.

இந்நிலையில் ரஷ்யாவின் விமானத் தாக்குதலில் காயமடைந்தவர்களை மீட்கும் பணியில், தொண்டு நிறுவனத்தினரும், தன்னார்வலர்களும் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் அவர்களும் படுகாயமடைந்தனர். போரில் காயமடைந்தவர்களை மீட்கச் சென்ற தன்னார்வ தொண்டர்களுக்கு நேர்ந்த சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்