உலகின் மிகவும் பாதுகாப்பான நகரங்களின் பட்டியல் வெளியானது

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
உலகின் மிகவும் பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் ஜப்பானின் டோக்கியோ நகரம் முதலிடத்தை பிடித்துள்ளது.

உலகில் குறிப்பிடத்தக்க 60 நகரங்களை தெரிவு செய்து, அங்குள்ள பொருளாதார வளர்ச்சி, தனிமனித பாதுகாப்பு, இணையதள பாதுகாப்பு, சுகாதார பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களை கருத்தில் கொண்டு தனியார் நிறுவனம் ஒன்று ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.

இதில் 10-வது இடத்தில் 85.2 புள்ளிகளுடன் சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரம் உள்ளது, இங்கு தனிமனித பாதுகப்புக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவது இல்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஹாங்காங் நகரம் 86.22 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் உள்ளது, இங்கு சுகாதார பாதுகாப்பு மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதாக ஆய்வில் கூறப்படுகிறது.

8-வது இடத்தில் இருக்கும் ஸ்டாக்ஹோம் நகரில் டிஜிட்டல் பாதுகாப்பு அச்சுறுத்தலில் இருப்பதாக ஆய்வறிக்கையில் கூறப்படுகிறது.

மேலும், பாதுகாப்பு மிகுந்த நகரங்களாக தெரிவாகியுள்ள அனைத்து நகரங்களும் பயங்கரவாதம், சைபர் அச்சுறுத்தல் என மனிதர்களால் உருவாக்கப்படும் ஆபத்துகளுக்கு தொடர்ந்து இரையாகி வருவதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பாதுகாப்பான நகரங்களின் பட்டியல்
  • Tokyo, Japan
  • Singapore
  • Osaka, Japan
  • Toronto, Canada
  • Melbourne, Australia
  • Amsterdam, The Netherlands
  • Sydney, Australia
  • Stockholm, Sweden
  • Hong Kong
  • Zurich, Switzerland

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்