அண்டார்டிகாவில் ஏலியன்களின் விமானம்: வைரலாகும் புகைப்படங்கள்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஏலியன்கள் தொடர்பில் ஆய்வு நடத்தும் குழுவானது, விபத்துக்குள்ளான ஏலியன் விமானம் தொடர்பில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

குறித்த புகைப்படங்கள் அனைத்தும் அண்டார்டிகாவில் பதிவானது என கூறும் ஏலியன் ஆய்வாளர்கள், அங்குள்ள பனிப்பிரதேசத்தில் திடீரென்று வித்தியாசமான அறிகுறிகள் காணப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி ஏலியன் ஆய்வாளர்கள் வெளியிட்ட இந்த புகைப்படங்கள் அனைத்தும் தற்போது வைரலாகியுள்ளது.

மேலும் உண்மையில் ஏலியன்களின் விமான தடம் அதுவா? அண்டார்டிகாவில் ஏலியன்கள் வாழ்கின்றனரா? அல்லது அண்டார்டிகாவில் புதிதாக தோன்றியுள்ள அந்த தடங்களின் உண்மைத்தன்மை என்ன என்பது குறித்து பல்வேறு கேள்விகள் பலர் எழுப்பியுள்ளனர்.

அங்குள்ள மலை ஒன்றில் மோதி, பின்னர் அப்பகுதியில் இருந்து வேகமாக ஊர்ந்து செல்லும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளது. ஆனால் சிலர் அது ஏலியன் விமானம் விபத்துக்குள்ளானது அல்ல எனவும், பனிப்பாறைகளில் ஏற்பட்ட விரிசலே அவ்வாறு அது நமது கண்களுக்கு காட்சி தருகிறது என குறிப்பிடுகின்றனர்.

வேறு சிலர், பனிப்பாறை பிளவு என்றால் அதன் தாக்கம் தெளிவாக தெரிந்திருக்கும், ஆனால் இது அவ்வாறு இல்லையே என விளக்கம் அளித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்