உலகின் சக்தி வாய்ந்த ராணுவத்தை கொண்ட நாடுகளின் பட்டியல் வெளியானது

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

உலக அளவில் சக்தி வாய்ந்த ராணுவத்தைக் கொண்ட நாடுகளின் பட்டியலை ‘Global Firepower List 2017' வெளியிட்டுள்ளது.

ராணுவ வளங்கள், இயற்கை வளங்கள், தொழில் மற்றும் புவியியல் சார்ந்த அம்சங்கள், கிடைக்கக் கூடிய வகையிலான மனிதசக்தி, நிலம், காற்று மற்றும் வான்வழி உட்பட 50 அம்சங்களின் அடிப்படையில் 133 நாடுகளை ஆய்வுக்கு உட்படுத்தி பட்டியல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா 602.8 பில்லியன் டொலர்களை ஒதுக்கி மீண்டும் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளாதாக குறிப்பிட்டுள்ளது.

இதன் அடுத்த இடத்தில் 150.5 பில்லியன் டொலர்கள் நிதி ஒதுக்கி சீனா உள்ளது. 76.7 பில்லியன் டொலர்களுடன் 3-வது இடத்தில் சவுதி அரேபியா உள்ளது.

4-வது இடத்தில் 61.2 பில்லியன் டொலர்களுடன் ரஷ்யாவும், 52.5 பில்லியன் டொலர்கள் நிதி ஒதுக்கியுள்ள இந்தியா 5-வது இடத்திலும் உள்ளது.

ஆனால் கடந்த 2016 ஆம் ஆண்டு பாதுகாப்புக்கு என 52.5 பில்லியன் டொலர்கள் ஒதுக்கிய பிரித்தானியா இந்த முறை 50.7 பில்லியன் டொலர்கள் ஒதுக்கியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளனர்.

பிரித்தானியா, ஜப்பான், துருக்கி, ஜேர்மனி மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் முறையே 6 முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன.

இந்த பட்டியல் குறித்து Global Firepwer தனது அறிக்கையில், ‘எங்களது சூத்திரம் சிறியதாக இருந்தாலும், தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட பெரிய நாடுகள், சிறிய வளர்ச்சியுடனான நாடுகளுடன் போட்டி போடுவதற்கு அனுமதிக்கும் வகையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்