பாகிஸ்தான் வரலாற்றில் முதன் முதலாக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இந்து பெண் தேர்வு

Report Print Santhan in ஏனைய நாடுகள்

பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறையாக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இந்துப் பெண் ஒருவர் செனட் அவை உறுப்பினராக தேர்வாகி உள்ளார்.

சிந்து மாகாணத்தில் உள்ள நகர்பர்கர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 39 வயதான பெண் கிருஷ்ண குமாரி கோலி.

இவர் பிலாவால் பூட்டோ ஜர்தாரி தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில், சிந்து மாகாணத்தில் பெண்களுக்கான ஒதுக்கீட்டு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

இதன் மூலம் இஸ்லாமியர்கள் நிறைந்த பாகிஸ்தானில், செனட் அவைக்கு தேர்வாகும் இந்து மதத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட பெண் என்ற வரலாற்றை படைத்துள்ளார்.

இதற்கு முன்னர் பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் ரத்னா பஃக்வந்தாஸ் என்ற இந்து பெண் செனட் அவைக்கு தேர்வாகி இருந்தார். பாகிஸ்தான் செனட் அவைக்கு தேர்வாகும் முதல் இந்துப் பெண் என்ற வரலாற்றை இவர் படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்