எதிரிகளின் இதயத்தில் நுழைந்து வசீகரிக்கும் வடகொரியா பெண்கள்: வெளியான பகீர் தகவல்

Report Print Santhan in ஏனைய நாடுகள்
287Shares
287Shares
ibctamil.com

உலகநாடுகளின் கவனத்தைப் பெற வடகொரியா ஏவுகணை ஏவ வேண்டியதில்லை எனவும் அதை விட சக்தி வாய்ந்த ஆயுதமாக அந்நாட்டு பெண் தூதர்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தென் கொரியாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது, தன்னுடைய அணு ஆயுத சோதனைகளால் உலகநாடுகளை அச்சுறுத்தி வரும் வடகொரியா, தென் கொரியா ஒலிம்பிக் போட்டிக்கு தன்னுடைய விளையாட்டு வீராங்கனைகளை அனுப்பியுள்ளது.

இதைத் தொடர்ந்து தென்கொரியாவிற்கு வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன்-னின் சகோதரியான கிம் யோ-ஜாங்கும் சென்றுள்ளார்.

இவர் தென் கொரிய தொலைக்காட்சி பார்வையாளர்களை வசீகரித்துள்ளார். தனது சகோதரரின் கடிதத்தை, தென் கொரிய ஜனாதிபதியிடம் கிம் யோ-ஜாங் வழங்கியபோது, அவரை பற்றிய ஒவ்வொரு விடயங்களும் தொலைக்காட்சியில் நேரலையாக ஆராயப்பட்டது.

அவரை பார்க்கும் போது என் இதயம் உருகுகிறது என்று பலரும் டுவிட்டரில் பதிவேற்றம் செய்துள்ளனர். அதுமட்டுமின்றி கிம் குடும்பத்தில் இப்படிப்பட்ட ஒரு பெண்ணா என்று தென்கொரியா மக்கள் மயங்கி பார்க்கின்றனர்.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இந்த மயக்கம் தற்போது வந்தது என்று கூற முடியாது. ஒரு வாரத்திற்கு முன்பே வந்துவிட்டது என்று கூறலாம்.

ஏனெனில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு நல்ல தோற்றமுடைய பெண்களைக் கொண்ட உற்சாகமூட்டும் பெண்கள் படையை வட கொரியா அனுப்பியது. குளிர்கால போட்டிகளின் போது, தங்களது அணியை இவர்கள் உற்சாகப்படுத்துவார்கள்.

தங்களது அழகுக்காகவும், திறமைக்காகவும் தேர்தேடுக்கப்பட்ட இப்பெண்கள், அழகிய ராணுவம் என்று கூறப்படுகிறது.

இப்படி தங்கள் வசீகர அழகு மூலம் பிறநாட்டவரை சுண்டி இழுக்கும் திறன் கொண்ட வடகொரியா பெண் தூதர்கள், எதிரிகளின் இதயத்தில் எளிதாக நுழைந்து அவர்களை வசியப்படுத்தும் திறன் கொண்டவர்கள் என்று பிரபல ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.

இப்படி வட கொரியாவின் மோரான்போங் என்ற பெண்கள் இசைக்குழுவின் முன்னாள் தலைவியாக இருந்தவர் தான் ஹுன் சாங்-வோல், இவர் தற்போது தென் கொரியாவில் இருக்கிறார். தென் கொரியாவில் இவருக்கு என்று ரசிகர்கள் பலர் உள்ளனர்.

தன்னுடைய சகோதரன் வடகொரியாவை விட்டு தப்பிச் சென்றதால், அவர் அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது, அதன் காரணமாக வடகொரியாவை விட்டு வெளியேறி தற்போது தென் கொரியாவில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் வடகொரியாவில் தனக்கு 3 மாதங்கள் அளிக்கப்பட்ட பயிற்சியை பற்றி அவர் கூறுகையில்,

வெளியே சென்று, தனது புன்னகையால் மற்றவர்களை ஈர்ப்பதே தனக்கு அளிக்கப்பட்ட வேலை.

வட கொரியாவின் கொள்கைகளை நாங்கள் பரப்ப வேண்டும். முன்னரங்கில் இருக்கும் போராளிகள் நாங்கள். நாங்கள் எப்படி பெருமைப்படுகிறோம் என்பதைக் காட்டுவதற்காக எதிரியின் இதயத்தில் நுழைகிறோம். நாங்கள் மற்றவர்களை விட சிறந்தவர்கள் என்பதைக் காட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் தெரியாத இடத்தைப் பார்த்து அதிர்ச்சியடையக் கூடாது. ஒரு நிமிடத்திற்குக் கூட தாய் நாட்டை மறக்க கூடாது. ஜென்ரல் கிம்மிற்கு மரியாதை செலுத்த இருக்கிறோம் என்பதை மறக்கக்கூடாது என்று பயிற்சியில் கூறப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் ஈர்ப்பு மையமாக வட கொரியாவின் உற்சாகமூட்டும் பெண்கள் படை இருப்பதாகவும் இந்த படைக்கு பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளதால் தனது நாடு மீது உள்ள சர்வதேச பார்வையை மேம்படுத்தவும் வட கொரியா இந்த உற்சாகமூட்டும் பெண்களை படையை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்