வடகொரியா வேஷம் போடுகிறது: 115 பேரைக் கொன்ற பெண் உளவாளியின் அதிரவைக்கும் வாக்குமூலம்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

ஒலிம்பிக்கில் பங்கேற்று பொருளாதார தடைகளை நீக்க வேண்டும் என்பதே வடகொரியாவின் நோக்கமாக இருக்கிறது என 115 பேரைக் கொன்ற பெண் உளவாளி வாக்குமூலம் அளித்துள்ளார்.

23-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தென் கொரியாவின் பியாங்சங் நகரில் கோலாகலமாக தொடங்கி நடந்து வருகிறது, இதன் தொடக்க விழாவில் வடகொரியா ஜனாதிபதியின் தங்கை கலந்து கொண்டார்.

இந்நிலையில் 1988ம் ஆண்டு நடந்த தென்கொரியாவில் நடைபெறவிருந்த ஒலிம்பிக்ஸை சீர்குலைக்க வடகொரியா சதித்திட்டம் குறித்து தெரிந்து கொள்ளலாம்,

அன்றைய நாளில் நடந்தது என்ன?

1987 ஆம் ஆண்டு இரண்டு வட கொரிய உளவாளிகள் தென் கொரிய விமானம் ஒன்றில் ஏறினர், அந்த விமானத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளைப் பொருத்திய அவர்கள் அபுதாபியில் இறங்கிவிட்டனர்.

மீண்டும் புறப்பட்ட தென் கொரிய விமானம் அந்தமான் பகுதியில் பறந்து கொண்டிருக்கும்போது வெடித்துச் சிதறியது, அதில் பயணம் செய்த 115 பேரும் கோரமாக பலியானர்கள்.

உளவாளிகள் இருவரும் பஹ்ரைனில் பிடிபட்டார்கள், பிடிபட்டதும் சயனைடு அருந்தியதில் ஆண் உளவாளி அங்கேயே உயிரிழந்தார். அந்தப் பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டாள்.

பின்னர் தென் கொரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவளை விசாரித்த நீதிமன்றம் அவளுக்கு மரணதண்டனை வழங்கியது. தான் எவ்விதம் வட கொரிய அதிபரின் மகனால் மூளைச் சலவை செய்ய்ப்பட்டாள் என்பதை அந்தப் பெண் விவரித்தாள், தன்னால் உயிரிழந்த குடும்பங்களிடம் மன்னிப்பும் கோரினாள்.

தென் கொரிய அதிபர், இந்த சம்பவத்துக்குக் காரணம் அவள் அல்ல, அவளை இயக்கிய வட கொரியாதான் காரணம் என்று கூறி அவளை மன்னித்தார்.

பின்னர் தன்னை விசாரணை செய்த அதிகாரியையே மணந்து கொண்டு அவள் ஒரு மறைவிடத்தில் வசிக்கிறாள்.

இன்னும் தான் குற்ற உணர்வோடேயே வாழ்வதாகவும் தான் செய்த கொலைகளுக்காக பரிகாரம் தேட வேண்டும் என்றும் கூறும் அவள், தென் கொரிய ஒலிம்பிக்கில் பங்கு பெறுவது குறித்து பேச வட கொரிய தலைவர்கள் தென் கொரியாவுக்கு செல்வதைக் கண்டிருக்கிறாள்.

இது பொய், ஏமாற்றுவேலை என்று கூறும் அவள், தன் அணு ஆயுத திட்டத்தை நிறைவேற்றுவதைத் தவிர வட கொரியாவுக்கு வேறெந்த நோக்கமும் கிடையாது என்கிறாள்.

பேச்சு வார்த்தை மூலமோ மென்மையான சொற்களாலோ வட கொரியாவை மாற்ற முடியாது என்று கூறும் அவள், அழுத்தம் கொடுப்பதன் மூலமாக மட்டுமே அதை வழிக்கு கொண்டு வர முடியும் என்று தான் நம்புவதாகக் கூறுகிறாள்.

வட கொரியா ஒலிம்பிக்கை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்த விரும்புகிறது அவ்வளவுதான் என்னும் அந்த உளவாளி தென் கொரியாவுடன் கை கோர்ப்பதன்மூலம் தன் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளிலிருந்து வட கொரியா தப்பிக்க முயற்சி செய்கிறது.

அனைத்து நாடுகளும் தன்னைத் ஒதுக்கி வைத்துள்ள தனிமைப்படுத்துவதிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்காக அது முயற்சிக்கிறது என்கிறாள் அவள்.

பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல, வட கொரியாவில் பயிற்றுவிக்கப்பட்டு மூளைச்சலவை செய்யப்பட்டு 115 பேரின் சாவுக்குக் காரணமாக இருந்த அவள் சொன்னால் நம்பித்தான் ஆகவேண்டும்.

சரி இந்த வெடிகுண்டு வெடிப்பால் வட கொரியாவுக்கு என்ன லாபம்? அது மற்ற நாடுகளை அச்சுறுத்த விரும்பியது. அந்த அச்சுறுத்தல் மூலம் அப்போதுதான் வெளி உலகோடு நல்லுறவு வைத்துக்கொள்ள விரும்பிய தென் கொரியாவுடன் யாரும் தொடர்பு வைத்துக்கொள்வதை அது தடுக்க விரும்பியது.

ஒலிம்பிக்கின் மூலம் தென் கொரியாவுக்கு ஏற்பட இருந்த புகழை அது தடுக்க நினைத்தது என்று காரணங்கள் நீண்டுகொண்டே செல்கின்றன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers