தீவிரவாத தாக்குதலில் கர்ப்பிணியின் இடுப்பில் குண்டுபாய்ந்தது: குழந்தை பெற்றெடுத்த அதிசயம்

Report Print Athavan in ஏனைய நாடுகள்

காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் கர்ப்பிணி பெண்ணின் பின்வயிற்றில் குண்டு பாய்ந்த நிலையில் அப்பெண் அழகான குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

காஷ்மீரில் நேற்று முன்தினம் காலை முதல் மதியம் வரை தீவிரவாதிகள் தொடர் தாக்குதல்களை நடத்தினர், இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது.

தீவிரவாதிகள் மூன்று பேர் பலியான நிலையில், தீவிரவாதி ஒருவர் துப்பாக்கி சூடு நடத்திய போது கர்ப்பிணி பெண்ணின் பின்வயிற்றில் குண்டு பாய்ந்தது.

பின்னர் உடனடியாக அந்த பெண் ராணுவ மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். இடுப்பு பகுதியில் குண்டு பாய்ந்திருந்த நிலையில் அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து குழந்தையை முதலில் சிசேரியன் மூலம் வெளியே எடுக்க முடிவு செய்தனர், குழந்தைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

குழந்தை 2.5 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக இருந்தது, பின்னர் இடுப்புபகுதியில் அறுவை சிகிச்சை செய்து, குண்டுகளை அகற்றினர். தற்போது தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்