கழிவறையில் செல்போன் பயன்படுத்தியவரின் நிலை: அனைவருக்குமான எச்சரிக்கை செய்தி

Report Print Athavan in ஏனைய நாடுகள்

கழிவறையில் அமர்ந்து அரைமணிநேரத்துக்கும் அதிகமாக செல்போனை பயன்படுத்திய நபருக்கு ஆசனவாய் வழியாக கட்டி ஒன்று வெளியே வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென் கிழக்கு சீனாவின் Zhongshan நகரை சேர்ந்த வாலிபர் ஒருவர் தொடர்ச்சியாக செல்போன்களில் கேம் விளையாடுவார்.

செல்போனுக்கு அடிமையாகிப் போன வாலிபர், சம்பவதினத்தன்று கழிவறையில் அமர்ந்து 30 நிமிடத்துக்கும் மேலாக செல்போனை பயன்படுத்தியுள்ளார்.

இதில் துரதிஷ்டவசமாக கட்டி ஒன்று ஆசனவாய் வழியாக வெளியே வந்துள்ளது, சுமார் 6 இன்ச் அளவில் பந்து போன்று வெளியே வந்த அந்த கட்டியை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.

மேலும் வாலிபரை பரிசோதித்த மருத்துவர்கள், பாதிக்கப்பட்ட நபருக்கு 4வயது முதல் தொங்கிய நிலையில் மலக்குடல் இருக்கும் வகையில் ஒரு குறைபாடு இருந்துள்ளது, அதை அவர் சரிவர கவனிக்காமல் சிகிச்சையை தவிர்த்ததால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதனால் மலக்குடலின் இறுதி பகுதி உடலில் ஒட்டாமல் விலகியதால் ஆசனவாய் வழியாக வெளியேறியுள்ளதாகவும், சிகிச்சைக்கு பின்னர் வாலிபர் குணமடைந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.


மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்